See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நயாகரா நீர்வீழ்ச்சி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நயாகரா நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ நீர்வீழ்ச்சி (கனடியன்), மூன்று நீர்வீழ்ச்சிகளில் ஒன்று
ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ நீர்வீழ்ச்சி (கனடியன்), மூன்று நீர்வீழ்ச்சிகளில் ஒன்று

நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய நீர்வீழ்ச்சிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ நீர்வீழ்ச்சியிலும் (குதிரை இலாட அருவி), மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் நீர்வீழ்ச்சியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் நீர்வீழ்ச்சியும் உண்டு. ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா நீர்வீழ்ச்சியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் நீர்வீழ்ச்சி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த நீர்வீ்ழ்ச்சியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த நீர்வீழ்ச்சியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த நீர்வீழ்ச்சியாகவும் இருக்கிறது.


"ஹார்ஸ் ஷூ" அருவி (அமெரிக்கா) சுற்றுவட்டக்காட்சி.
"ஹார்ஸ் ஷூ" அருவி (அமெரிக்கா) சுற்றுவட்டக்காட்சி.

இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.


அழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயகாரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயகாரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல் ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை.

[தொகு] மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)

படிமம்:Maid of Mist Panorama.jpg
மெயிட் ஆஃப் த மிஸ்ட கப்பல்

மெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும்.

[தொகு] வானவில் பாலம் (Rainbow Bridge)

வானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது.


வானவில் பாலம் சுற்றுவட்டக்காட்சி.
வானவில் பாலம் சுற்றுவட்டக்காட்சி.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -