நபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நபி என்பது அரபி வார்த்தையாகும். இதுவரை உலகில் ஒரு லட்சத்து இருபத்திநாலாயிரம் நபிமார்கள் தோன்றியதாக இஸ்லாம் கூறுகிறது. அதில் முதல் நபி ஆதம் (ஸல்) என்றும் கடைசி நபி முகம்மது (ஸல்) என்றும் அழைக்கப்படுகின்றனர். நபி என்பவர் இறைப்பணிக்காக இறைவனால் நியமிக்கப்படுபவர். நபி சாதாரண மனிதரே ஆவார், மனிதர்களுக்கு இறைச்செய்தியை அறிவிக்கும் தூதர் ஆவார்.
[தொகு] திருக்குர் ஆனில் நபிமார்கள்
முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
- ஆதம் (அலை)
- இத்ரீஸ் (அலை)
- நூஹ் (அலை)
- ஹுது (அலை)
- சாலீஹ் (அலை)
- இப்ராஹீம் (அலை)
- இஸ்மாயீல் (அலை)
- இஸ்ஹாக் (அலை)
- லூத் (அலை)
- யாகூபு (அலை)
- யூசுப் (அலை)
- சுஹைபு (அலை)
- அய்யூப் (அலை)
- மூசா (அலை)
- ஹாரூன் (அலை)
- துல்கர்னைன் (அலை)
- தாவூது (அலை)
- சுலைமான் (அலை)
- இலியாஸ் (அலை)
- யஹ்யா (அலை)
- யூனுஸ் (அலை)
- ஜக்கரியா (அலை)
- அல் யச (அலை)
- ஈசா (அலை)
- முஹம்மத் (ஸல்)
[தொகு] ஸல்/அலை
நபிமார்களின் பெயர்களை செவியுறும்பொழுது "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று கூறுவார்கள். அதற்கு பொருள், இறைவன் அவருக்கு அருளைப்பொழிவானாக.
முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.
முகம்மது நபி அல்லாத ஏனைய பிற எல்லா நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.