ஆகஸ்டு 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்ட் 5 கிரிகோரியன் ஆண்டின் 217வது நாளாகும். நெட்டாண்டுகளில் 218வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.
<< | ஆகஸ்ட் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1100 - இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.
- 1806 - இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல முயன்றனர்.
- 1944 - போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.
- 1949 - ஈக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1960 - புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1962 - 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
- 1962 – அமெரிக்க நடிகை மாரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
- 1963 - ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.
- 2006 - வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1850 - மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1893)
- 1923 - தேவன் நாயர், சிங்கப்பூர் அதிபர்
- 1930 - நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்.
[தொகு] இறப்புகள்
- 1895 - பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியத் தத்துவவியலாளர் (பி. 1820)
- 1962 - மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)
- 1984 - றிச்சார்ட் பேர்ட்டன், ஆங்கிலேய நடிகர் (பி. 1925)
- 1991 - சொயிச்சீரோ ஹொண்டா, ஹொண்டா நிறுவனத்தின் தாபகர் (பி. 1906)
[தொகு] சிறப்பு நாள்
- புர்கினா பாசோ - விடுதலை நாள்