ஆகஸ்டு 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஆகஸ்ட் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMVIII |
ஆகஸ்டு 20 கிரிகோரியன் ஆண்டின் 232வது நாளாகும். நெட்டாண்டுகளில் 233வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1000 - ஹங்கேரி நாடு உருவாக்கப்பட்டது.
- 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிறசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.
- 1917 - இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
- 1940 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
- 1948 - "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
- 1960 - செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
- 1968 - 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
- 1988 - ஈரான்-ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
- 1991 - எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
- 2006 – கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
- 2006 - நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1944 - ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர், (இ. 1991)
[தொகு] இறப்புகள்
- 1823 - பாப்பரசர் ஏழாவது பயஸ் (பி. 1740)
- 1914 - பாப்பரசர் பத்தாவது பயஸ், (பி. 1835)
- 1915 - போல் ஏர்ள்றிச் (Paul Ehrlich), ஜேர்மன் அறிவியலாளர், மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1854)
- 1917 - அடொல்ஃப் வொன் பாயெர் (Adolf von Baeyer), ஜேர்மன் வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1835)
- 1961 - பேர்சி பிறிட்ஜ்மன் (Percy Williams Bridgman), அமெரிக்க இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1882)