விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
ஜனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - ஜூன் - ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்
இப்போது 11:37 மணி செவ்வாய், ஜூன் 24, 2008 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
அக்டோபர் 1: விடுதலை நாள்: சைப்பிரஸ்; நைஜீரியா (இரண்டும் 1960); துவாலு (1978); பலாவு (1994).
- 1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
- 1949 - மா சே துங் (படம்) மக்கள் சீனக் குடியரசை அறிவித்தார்.
- 2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 30 – செப்டம்பர் 29 – செப்டம்பர் 28
அக்டோபர் 2: விடுதலை நாள்: கினி (1958); காந்தி ஜெயந்தி; அனைத்துலக வன்முறையற்ற நாள்
- 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1975 - இந்திய அரசியல் தலைவர், தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 1 – செப்டம்பர் 30 – செப்டம்பர் 29
அக்டோபர் 3: ஜெர்மனி - இணைப்பு நாள் (1990)
- 1908 - பிராவ்டா (படம்) செய்திப்பத்திரிகையின் முதல் இதழ் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சகாக்களினால் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
- 1981 - வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் "மேஸ்" சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
- 1993 - சோமாலியாவின் போர்பிரபு "முகம்மது ஃபரா ஐடிட்" என்பவரின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 2 – அக்டோபர் 1 – செப்டம்பர் 30
அக்டோபர் 4: லெசோத்தோ - விடுதலை நாள் (1966), உலக வன விலங்குகள் நாள்
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
- 1957 - முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 (படம்) சோவியத் ஒன்றியத்தால் பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1957 - பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த மத குருக்களால் "கண்டி யாத்திரை" நடத்தப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 3 – அக்டோபர் 2 – அக்டோபர் 1
அக்டோபர் 5: போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)
- 1823 - இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் இராமலிங்க அடிகளார் (படம்) பிறப்பு.
- 1864 - இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 - விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 4 – அக்டோபர் 3 – அக்டோபர் 2
- 1889 - தோமஸ் அல்வா எடிசன் (படம்) தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்.
- 1890 - யாழ்ப்பாண நகரில் "சின்னக்கடை" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
- 1976 - தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 5 – அக்டோபர் 4 – அக்டோபர் 3
- 1737 - இந்தியாவின், வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
- 1959 - சோவியத் விண்கலம் லூனா 3 முதற்தடவையாக எடுத்த சந்திரனின் அதி தூரத்திய புகைப்படங்களை (படம்) பூமிக்கு அனுப்பியது.
- 2001 - ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. வலிமையான கட்டிடங்களையும் ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ரக ஏவுகணைகளை ஏவியது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 6 – அக்டோபர் 5 – அக்டோபர் 4
- 1959 - கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (படம்) இறப்பு.
- 1967 - கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.
- 2005 - காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 7 – அக்டோபர் 6 – அக்டோபர் 5
அக்டோபர் 9: உகாண்டா - விடுதலை நாள் (1962)
- 1967 - சே குவேரா (படம்) பொலிவியாவில் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார்.
- 1983 - மியான்மாரில் தென் கொரிய அதிபர் சுன் டூ-ஹுவான் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்
- 1987 - யாழ்ப்பாணத்தில் "நிதர்சனம்" தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் "முரசொலி" நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 8 – அக்டோபர் 7 – அக்டோபர் 6
அக்டோபர் 10: பீஜி - குடியரசு நாள் (1987); தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
- 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
- 1973 - கருநாடக, மற்றும் தமிழிசை அறிஞர் பாபநாசம் சிவன் (படம்) இறப்பு.
- 1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 9 – அக்டோபர் 8 – அக்டோபர் 7
- 1968 - நாசா தனது முதலாவது மனித விண்கப்பலான அப்பல்லோ 7ஐ மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
- 2006 - ஈழப்போர்: யாழ்ப்பாணம், முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
- 2006 - ஈழத்தின் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஏ. ஜே. கனகரத்னா (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 10 – அக்டோபர் 9 – அக்டோபர் 8
அக்டோபர் 12: எக்குவடோரியல் கினி - விடுதலை நாள் (1968)
- 1492 - கொலம்பஸ் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணி, கரிபியனின் பஹாமாசில் கால் வைத்தார்.
- 1798 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.
- 1964 - சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 (படம்) விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 11 – அக்டோபர் 10 – அக்டோபர் 9
- 54 - ரோம் மன்னன் கிளோடியஸ் அவனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதினால் அவளது மகன் நீரோ (படம்) ரோமின் மன்னனானான்.
- 1917 - யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்தி, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நட்பு நாடுகளின் பக்கம் சாய்ந்ததைத் தொடர்ந்து அச்சு அணி நாடுகள் மீது போரை அறிவித்தது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 12 – அக்டோபர் 11 – அக்டோபர் 10
அக்டோபர் 14: உலகத் தர நிர்ணய நாள்
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் "ரோயல் ஓக்" என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
- 1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கார் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
- 2005 - தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 13 – அக்டோபர் 12 – அக்டோபர் 11
விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 15
விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 16
அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் முதன் முறையாக ஐக்கிய அமெரிக்காவின் கப்பலைத் தாக்கியது.
- 1979 - அன்னை தெரேசாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1981 - புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான கண்ணதாசன் இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 16 – அக்டோபர் 15 – அக்டோபர் 14
அக்டோபர் 18:ஐக்கிய அமெரிக்கா:அலாஸ்கா: அலாஸ்கா நாள்
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லரிடமிருந்து ஜெர்மன் தேசிய இராணுவத்தை அமைப்பதற்கான கட்டளைப் பிறந்தது.
- 1910 - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி. நவரத்தினம் பிறப்பு. (படம்)
- 1931 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் தொமஸ் அல்வா எடிசன் இறப்பு
அண்மைய நாட்கள்: அக்டோபர் 17 – அக்டோபர் 16 – அக்டோபர் 15
அக்டோபர் 19:அல்பேனியா:அன்னை தெரேசா நாள்
- 1974 - நியுயே அரசியலமைப்பு நாள் (1974இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை)
- 2005 - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்குத் தொடங்கியது.
- 2006 - தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா மரணம். (படம்)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 18 - அக்டோபர் 17 – அக்டோபர் 16
- 1469 - சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் (படம்) பிறப்பு.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோஸ்லாவிய தலைநகர் பெல்கிரேட்டை நாசி ஜெர்மனியிடமிருந்து மீட்டது.
- 2004 - முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 19 – அக்டோபர் 18 – அக்டோபர் 17
- 1835 - கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறப்பு.
- 1944 - கிறகுஜேவாச் படுகொலைகள் (படம்): நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரைப் படுகொலை செய்தனர்.
- 1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கோல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 20 – அக்டோபர் 19 – அக்டோபர் 18
- 1383 - போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டின் இறப்பின் பின்னர் ஆண் வாரிசு அற்ற நிலையில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1925 - தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் அ. மாதவையா (படம்) இறப்பு.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் கசெல் என்ற நகரில் பிரித்தானியர் வான் தாக்குதல் நடத்தியதில் 10,000 பேர் கொல்லப்பட்டு 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 21 – அக்டோபர் 20 – அக்டோபர் 19
அக்டோபர் 23: ஹங்கேரி - தேசிய நாள்
- 1956 - ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர் (படம்). இது நவம்பர் 4இல் நசுக்கப்பட்டது.
- 1941 - உக்ரேனின் "ஒடேசா" நகரில் 19,000 யூதர்கள், ருமேனிய இராணுவ அதிகாரி நிக்கலாய் டெலியானு தலைமையில் ருமேனியா மற்றும் ஜேர்மன் படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1983 - லெபனானில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 22 – அக்டோபர் 21 – அக்டோபர் 20
அக்டோபர் 24: ஐக்கிய நாடுகள் நாள், சாம்பியா - விடுதலை நாள் (1964)
- 1801 - பெரிய மருது (படம்), அவரது சகோதரர் மற்றும் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
- 1960 - சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
- 1994 - கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 23 – அக்டோபர் 22 – அக்டோபர் 21
அக்டோபர் 25: கசக்ஸ்தான் - குடியரசு நாள் (1990)
- 1881 - ஸ்பானிய ஓவியர், சிற்பி பாப்லோ பிக்காசோ (படம்) பிறப்பு.
- 1971 - ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 2000 - பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, "பிந்துனுவேவா" சிறைச்சாலை மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 24 – அக்டோபர் 23 – அக்டோபர் 22
அக்டோபர் 26: ஆஸ்திரியா - தேசிய நாள் (1955)
- 1876 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பக்கிங்ஹாம் அரசரால் எடுக்கப்பட்டது.
- 1947 - காஷ்மீர் மகாராஜா "ஹரி சிங்" இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார் (படம்).
- 2002 - மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 25 – அக்டோபர் 24 – அக்டோபர் 23
அக்டோபர் 27: விடுதலை நாள்: செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் (1979), துருக்மெனிஸ்தான் (1991)
- 1605 - முகலாய மன்னன் அக்பர் (படம்) இறப்பு.
- 1795 - ஸ்பானியக் குடியேற்றநாடுகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது.
- 1982 - யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 26 – அக்டோபர் 25 – அக்டோபர் 24
- 1492 - ஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.
- 1886 - நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் பிரான்ஸ் அன்பளிப்புச் செய்த விடுதலைச் சிலையைத் (படம்) திறந்து வைத்தார்.
- 1941 - லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜேர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 27 – அக்டோபர் 26 – அக்டோபர் 25
அக்டோபர் 29: துருக்கி - குடியரசு நாள் (1923)
- 1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
- 1950 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் (படம்) தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
- 1999 - ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் உயிரிழந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடிந்தனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 28 – அக்டோபர் 27 – அக்டோபர் 26
- 1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடை அடைந்தார்.
- 1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்தும் சட்டமாக சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
- 1999 - இலங்கையின் மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 29 – அக்டோபர் 28 – அக்டோபர் 27
- 1811 - வன்னி மன்னன் பண்டார வன்னியன் இறப்பு.
- 1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
- 1961 - ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
- 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி (படம்) இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: அக்டோபர் 30 – அக்டோபர் 29 – அக்டோபர் 28