See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கிறகுஜேவாச் படுகொலைகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கிறகுஜேவாச் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

படுகொலைகள்
படுகொலைகள்

கிறகுஜேவாச் படுகொலைகள் என்பது நாசி ஜேர்மன் இராணுவத்தினரால் சேர்பிய (அன்றைய யுகோஸ்லாவியா) நகரான கிறகுஜேவாச்சில் பெண்கள் குழந்தைகள் உட்பட சேர்பிய, ரோமானிய இனத்தைச் சேர்ந்த சுமார் 7000 பேர்வரை படுகொலைச் செய்யப்பட்டதைக் குறிக்கும். இம்மனிதப்படுகொலை 1941 அக்டோபர் 20-21 நிகழ்ந்தது.[1]ஆகிய நாட்களில் நடைப்பெற்றது. இது ஜேர்மனியின் சேர்பிய ஆக்கிரமிப்பின் போது நடைப்பெற்ற கொடுரமான படுகொலைகளில் ஒன்றாகும்.

பொருளடக்கம்

[தொகு] காரணிகள்

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்கள் போரில் காயமுறும் ஒவ்வொரு ஜேர்மனியருக்கும் 50 சேர்பியர் வீதமும், கொல்லப் படும் ஒவ்வொரு ஜேர்மனியருக்கும் 100 சேர்பியரும் கொலைச் செய்ய்ப்படுவர் எனக் கூறியிருந்தனர்.[2]ஜேர்மன் துருப்புக்கள் யுகோஸ்லாவிய பார்டீசன் படைகளாலும், செட்னிக்ஸ் விசுவாசிகளாலும் கொரொஞ்சி மிலனொவக் நகருக்கு அருகே தாக்கப்பட்டனர். இதன் போது தாங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காகவே ஜேர்மனியர் இப்படுகொலைகளைச் செய்தார்கள்.

[தொகு] கைதும் படுகொலையும்

அக்டோபர் 19 முன் காலையில் முழுநகரமும் சுற்றிவலைக்கப்பட்டது. 16 தொடக்கம் 60 வயதுடைய சுமார் 10,000 பேர் கைது செய்யப்பட்டனர். பாடசலைகளிலிருந்தும் மாணவர்கள் கொண்டுச் செல்லப்பட்டனர். அடுத்த நாள் அக்டோபர் 20 மாலை 6 மணியளவில் படுகொலைகள் தொடங்கின. சுமார் 400 பேர் கொண்ட குழுக்களாக மக்கள் துப்பாகியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடுகள் அடுத்த நாளும் மந்தகதியில் (அக்டோபர் 21) தொடர்ந்தன. துப்பாக்கிச் சூடுகளின் முடிவில் மீதமிருந்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டனர்.

[தொகு] நினைவுக்கல் மற்றும் நிகழ்வுகள்

"உடைந்த சிறகுகள்" படுகொலைச் செய்யப்பட்டவர்களுக்கான ஒரு நினைவுக்கல்
"உடைந்த சிறகுகள்" படுகொலைச் செய்யப்பட்டவர்களுக்கான ஒரு நினைவுக்கல்

இப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களை நினவுக்கூறும் வகையில் படுகொலைகள் நடைப்பெற்ற சுமாரைஸ் என்ற இடம் நினைவுப் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இப்பூங்காவில் பல நினைவுக் கற்கள் காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டதை நினைவுக் கூறுமவகையில் பல கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன.

[தொகு] மேற்கோள்கள்

  1. Savich, Carl K. (October 18, 2003). German Occupation of Serbia and the Kragujevac Massacre. (html) www.antiwar.com. இணைப்பு அக்டோபர் 20, 2007 அன்று அணுகப்பட்டது.
  2. UNITED STATES MILITARY TRIBUNAL, NUREMBERG (8TH JULY, 1947, TO 19TH FEBRUARY, 1948). CASE No. 47:TRIAL OF WILHELM LIST AND OTHERS. (html) Law Reports of Trials of Major War Criminals Vol. VIII. pp. 34 UNITED STATES MILITARY TRIBUNAL, NUREMBERG. இணைப்பு அக்டோபர் 20, 2007 அன்று அணுகப்பட்டது.

[தொகு] வெளியிணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -