1858
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1820கள் 1830கள் 1840கள் - 1850கள் - 1860கள் 1870கள் 1880கள் |
ஆண்டுகள்: | 1855 1856 1857 - 1858 - 1859 1860 1861 |
1858 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1858 MDCCCLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1889 |
சீன நாட்காட்டி | 4554-4555 |
எபிரேய நாட்காட்டி | 5617-5618 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1913-1914 1780-1781 4959-4960 |
இரானிய நாட்காட்டி | 1236-1237 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1278-1279 |
ரூனிக் நாட்காட்டி | 2108
|
1858 (MDCCCLVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - இலங்கையில் முதலாவது தொலைத்தந்தித் தொடர்பு கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- ஜனவரி 9 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
- ஜனவரி 14 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
- மார்ச் 30 - ஹைமன் லிப்மன் அழிப்பானுடன் சேர்ந்த எழுதுகோளுக்கான காப்புரிமம் பெற்றார்.
- ஜூன் 17 - ஜான்சிராணி வெள்ளையர்களுடன் போரிட்டு மடிந்தாள்.
- ஜூன் 20 - முதல் இந்திய விடுதலைப் போரின் கடைசி புரட்சியாளன் பிரித்தானியரிடம் குவாலியரில் பிடிபட்டான்.
- ஆகஸ்ட் 3 - இலங்கையில் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 17 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- அக்டோபர் - இலங்கையில் தொலைத்தந்தித் தொடர்பு கண்டிக்கும் மன்னாருக்கும் இடையில் மிகிந்தலை வழியாக ஏற்படுத்தப்பட்டது.
[தொகு] நாள் அறியப்படாதவை
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகாரங்களையும் சொத்துக்களையும் பிரித்தானிய அரசு கைப்பற்றியது.
- ஹென்றி கிரேயின் மனித உடற்கூறு இயல் ஆங்கிலப் பாடநூல் வெளியானது.
[தொகு] பிறப்புகள்
- ஏப்ரல் 18 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)