செப்டம்பர் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 261வது நாளாகும். நெட்டாண்டுகளில் 262வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 104 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1502 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடைசியுமான கடற்பயணத்தின் போது கொஸ்டா ரிக்காவில் தரையிறங்கினார்.
- 1635 - ரோம் பேரரசின் மன்னன் இரண்டாம் பேர்டினண்ட் பிரான்சின் மீது போர் தொடுத்தான்.
- 1759 - கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- 1810 - சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.
- 1812 - மொஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது.
- 1906 - ஹொங்கொங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சொபொபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1960 - பிடெல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
- 1961 - ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் (Dag Hammarskjöld) கொங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
- 1968 - இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1974 - சூறாவளி ஃபீஃபீ (Hurricane Fifi) ஹொண்டூராசைத் தாக்கியதில் 5,000 பேர் கொல்லப்ப்பட்டனர்.
- 1976 - பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- 1980 - சயூஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.
- 1982 - லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
- 1988 - பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கபட்டது. சனநாயகத்துக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
- 1997 - வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2006 - கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லீம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1819 - லியோன் ஃபோக்கோ (Leon Foucault), பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1868)
[தொகு] இறப்புகள்
- 1180 - ஏழாம் லூயி, பிரான்சின் மன்னன் (பி. 1120)
- 1783 - லியோனார்டு ஆய்லர், சுவிற்சர்லாந்து கணிதவியல் அறிஞர் (பி. 1707)
- 1945 - இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
- 1961 - டாக் ஹமாஷெல்ட், சுவீடனைச் சேர்ந்த ஐநா பொதுச் செயலர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
- 1966 - வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
- 1967 - ஜோன் கொக்ரொஃப்ட் (John Cockcroft), பிரித்தானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
- 1978 - ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், (பி. 1898)