டிசம்பர் 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 357வது நாளாகும். நெட்டாண்டுகளில் 358வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 8 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1914 - முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவை அடைந்தன.
- 1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.
- 1947 - முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- 1948 - பிரதமர் டோஜோ உட்பட ஏழு ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1954 - முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
- 1972 - நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
- 1972 - தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
- 1979 - சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
- 1986 - தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
- 1990 - 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2004 - தெற்குப் பெருங்கடலில் மக்குவாரி தீவில் 8.1 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.
- 2005 - அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கு நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
[தொகு] பிறப்புக்கள்
- 1902 - சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (இ. 1987)
- 1956 - பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் (இ. [[[987]])
[தொகு] இறப்புகள்
- 1972 - அந்திரே தூப்பொலியெவ், சோவியத் விமான வடிவமைப்பாளர் (பி. 1888)
- 2004 - பி. வி. நரசிம்மராவ் ஒன்பதாவது இந்தியப் பிரதமர் (பி. 1921)