ஜனவரி 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 19 கிரிகோரியன் ஆண்டின் 19வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 346 (நெட்டாண்டுகளில் 347) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேலிசின் பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.
- 1839 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.
- 1899 - ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.
- 1903 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.
- 1917 - லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.
- 1927 - பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.
- 1966 - இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1981 - ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகள்ளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
- 1983 - நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.
- 1986 - முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.
- 1997 - 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.
- 2006 - சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.
- 2006 - புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.
- 2007 - இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
[தொகு] பிறப்புகள்
- 1736 - ஜேம்ஸ் உவாட், கண்டுபிடிப்பாளர் (இ. 1819)
- 1809 - எட்கார் அலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1849)
- 1912 - லியோனிட் கண்டரோவிச், நோபல் பரிசு பெற்ற இரசியப் பொருளியலாளர் (இ. 1986)
- 1933 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)
[தொகு] இறப்புகள்
- 1905 - தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817)
- 1990 - ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931)