மார்ச் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 30 கிரிகோரியன் ஆண்டின் 89ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 90ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 240 - ஹேலியின் வால்வெள்ளி பற்றிய முதலாவது பதிவு.
- 1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- 1814 - நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர்.
- 1822 - ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது.
- 1831 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
- 1842 - அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
- 1851 - ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- 1858 - அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.
- 1867 - அலாஸ்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²), ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் கொள்வனவு செய்தார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஆஸ்திரியாவினுள் நுழைந்து வியன்னா நகரைக் கைப்பற்றினர்.
- 1949 - ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரெய்க்ஜாவிக் நகரில் கலவரம் இடம்பெற்றது.
- 1965 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 1981 - அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- 1949 - பிரீட்ரிக் பேர்ஜியஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1884)
- 1965 - பிலிப் ஹென்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1896)
- 2005 - ஓ. வி. விஜயன், இந்திய, மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)