நவம்பர் 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318வது நாளாகும். நெட்டாண்டுகளில் 319வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
- 1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
- 1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
- 1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
- 1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
- 1965 - வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.
- 1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
- 1970 - மேற்கு வேர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
- 1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
- 1990 - இரு ஜேர்மனிகளினதும் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
- 1991 - கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பினார்.
- 2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
[தொகு] பிறப்புக்கள்
- 1840 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)
- 1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)
- 1971 - அடம் கில்கிறிஸ்ற், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- இந்தியா: குழந்தைகள் நாள்.
- உலக நீரிழிவு நோய் நாள்