மார்ச் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 88ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 193 - ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான்.
- 845 - ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.
- 1802 - ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
- 1809 - மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்ஸ் ஸ்பெயினை வென்றது.
- 1879 - ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
- 1930 - கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
- 1939 - ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான்.
- 1979 ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
- 1994 - தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 : ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
- 2005 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1862 - அரிஸ்டைட் பிறயண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1932)
- 1868 - மாக்சிம் கார்க்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1936)
- 1892 - கோர்னெயில் ஹைமான்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
- 1930 - ஜெரோமி பிரீட்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1982 - சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை
[தொகு] இறப்புக்கள்
- 1943 - எஸ். சத்தியமூர்த்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
- 1982 - வில்லியம் ஜியோக், நோபல் பரிசு பெற்ற கனடியர் (பி. 1895)
- 2006 - வேதாத்திரி மகரிஷி, தத்துவஞானி (பி. 1911)