அக்டோபர் 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 12 கிரிகோரியன் ஆண்டின் 285வது நாளாகும். நெட்டாண்டுகளில் 286வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 80 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1492 - கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணினார்.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்த நாள் நாட்காட்டிகளில் இல்லை.
- 1798 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.
- 1899 - தென்னாபிரிக்காவின் போவர் குடியரசு இங்கிலாந்து மீது போரை அறிவித்தது.
- 1915 - முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் ஜேர்மனியர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1941 - உக்ரேனின் தினிபுரோபெத்ரோவ்ஸ்க் நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜேர்மனியினர் 11,000 யூதர்களைக் கொன்றனர்.
- 1964 - சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.
- 1968 - எக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1976 - மறைந்த மா சே துங்கின் இடத்திற்கு ஹுவா ஜியோஃபெங்க் என்பவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிப்பதாக மக்கள் சீனக் குடியரசு அறிவித்தது.
- 1984 - ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பில் இருந்து மார்கரெட் தாட்சர் காயமெதும் அடையாமல் உயிர் தப்பினார்.
- 1986 - மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
- 1999 - பாகிஸ்தானில் இடம்பெற்ற இரத்தம் சிந்தாப் புரட்சியில் பேர்வெஸ் முஷாரப் நாவாஸ் ஷெரீப்பை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் அதிபரானார்.
- 1999 - உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.
- 2001 - அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோஃபி அனான்க்கும் ஐ.நா. அவைக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
- 2002 - பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
- 2003 - பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1924 - அனத்தோலி பிரான்ஸ், பிரெஞ்சு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1844)
- 1965 - போல் ஹேர்மன் முல்லர், சுவிட்சர்லாந்து வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)
[தொகு] சிறப்பு நாள்
- எக்குவடோரியல் கினி - விடுதலை நாள் (1968)
- மாலாவி - அன்னையர் நாள்