செப்டம்பர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 262வது நாளாகும். நெட்டாண்டுகளில் 263வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 103 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1870 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது.
- 1952 - ஐக்கிய அமெரிக்கா சார்லி சப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது.
- 1976 - துருக்கிய போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
- 1983 - சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1985 - மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - நைஜர் நாட்டில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததனால் 171 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1911 - வில்லியம் கோல்டிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் (இ. 1993)
[தொகு] இறப்புகள்
- 1980 - கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)
[தொகு] சிறப்பு நாள்
- சிலி - இராணுவத்தினர் நாள்
- சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)