வில்லியம் கோல்டிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சர் வில்லியம் கோல்டிங் (Sir William Gerald Golding, செப்டம்பர் 19, 1911 – ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும். பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961 இன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980 இல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ்(Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். 1988 இல் சர் பட்டம் பெற்றார். 1993 இல் காலமானார்.