செப்டம்பர் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 271வது நாளாகும். நெட்டாண்டுகளில் 272வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 94 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1708 - ரஷ்யாவின் முதலாம் பீட்டர் மன்னன் சுவீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
- 1795 - யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றினர்.
- 1939 - நாசி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம் வீழ்ந்தது.
- 1961 - டமாஸ்கசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்றியமான ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது.
- 1993 - புலோப்பளைச் சமர்: கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட "யாழ்தேவி இராணுவ நடவடிக்கை" விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
- 1994 - பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர்.
- 2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
[தொகு] பிறப்புக்கள்
- கிமு 551 - கன்ஃபூசியஸ், சீனாவின் பகுத்தறிவாளர் ( இ. கிமு 479)
- 1929 - லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி.
[தொகு] இறப்புகள்
- 1895 - லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1822)
- 1953 - எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1889)
- 1956 - வில்லியம் போயிங், அமெரிக்க வான்வெளி முன்னோடி (பி. 1881)
- 1970 - கமால் அப்துல் நாசர், எகிப்திய அதிபர் (பி. 1918)
- 1978 - பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர், (பி. 1912)
- 1989 - பேர்டினண்ட் மார்க்கொஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (பி. 1917)
[தொகு] சிறப்பு நாள்
- தாய்வான் - ஆசிரியர் நாள் (கன்பூசியஸ் பிறந்த நாள்)