ஜூலை 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 30 கிரிகோரியன் ஆண்டின் 211வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 212வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1629 - இத்தாலி நேப்பிள்ஸ் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.
- 1930 - உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.
- 1932 - கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 1966 - உதைபந்தாட்ட உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டது.
- 1971 - அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.
- 1997 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் திறெட்போ என்ற இடத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1818 - Emily Brontë, ஆங்கில நாவலாசிரியர் (இ. 1848)
- 1863 - ஹென்றி ஃவோர்ட், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1947)
- 1947 - ஆர்னோல்ட் ஸ்வாசனேகர், நடிகர்
[தொகு] இறப்புகள்
- 1969 - இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்.