ஜூலை 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 20 கிரிகோரியன் ஆண்டின் 201வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 202வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 164 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1935 - இந்தியாவில் லாகூரில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
- 1947 - பர்மியப் பிரதமர் ஓங் சான் மற்றும் 7 அமைச்சர்கள் கொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஊ சோ கைது செய்யப்பட்டார்.
- 1949 - 19-மாதப் போரின் பின்னர் இஸ்ரேலும் சிரியாவும் யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டனர்.
- 1951 - ஜோர்தானின் மன்னர் முதலாம் அப்துல்லா ஜெருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1960 - இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் பிரதமராகத் தெரிவான முதற் பெண் ஆவார்.
- 1962 - கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
- 1969 - அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது.
- 1969 - நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்போலோ 11 இல் சென்று சந்திரனில் காலடி வைத்தனர்.
- 1976 - வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.
- 1979 - இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1989 - பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி டோ ஓங் சான் சூ கீ இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- 1996 - ஸ்பெயினில் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- கிமு 356 - மகா அலெக்சாந்தர், கிரேக்க மன்னன் (இ. கிமு 323)
- 1822 - கிரிகோர் ஜோஹன் மெண்டல், ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர் (இ. 1884)
- 1919 - சேர் எட்மண்ட் ஹில்லறி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர், நியூசிலாந்தின் மலையேறி
- 1929 - ராஜேந்திர குமார், இந்திய நடிகர் (இ. 1999)
[தொகு] இறப்புகள்
- 1937 - மார்க்கோனி, வானொலியைக் கண்டுபிடித்தவர் (பி. 1874
- 1973 - புரூஸ் லீ, தற்காப்புக்கலை வல்லுநர், ஹாலிவுட் நடிகர் (பி. 1940)