ஜூலை 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 4, கிரிகோரியன் ஆண்டின் 185வது நாளாகும். நெட்டாண்டுகளில் 186வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 180 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1776 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.
- 1810 - பிரான்ஸ் ஆம்ஸ்டர்டாமை ஆக்கிரமித்தது.
- 1918 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்ஷெவிக்கினரால் கொல்லப்பட்டனர்.
- 1941 - நாசி ஜெர்மனியினரால் போலந்தில் லூவோவ் (Lwów) என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.
- 1946 - 381 வருடக் காலனித்துவ ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்ஸ் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1976 - உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இஸ்ரேலிய கொமாண்டோப் படையினர் விடுவித்தனர்.
- 2006 - டிஸ்கவறி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1807 - கரிபால்டி, நவீன இத்தாலியின் தந்தை (இ. 1882)
- 1898 - குல்சாரிலால் நந்தா, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1998)
[தொகு] இறப்புகள்
- 1826 - ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1735)
- 1826 - தாமஸ் ஜெஃவ்வர்சன், ஐக்கிய அமெரிக்காவின் 3வது குடியரசுத் தலைவர்(பி. 1743)
- 1831 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது குடியரசுத் தலைவர்(பி. 1758)
- 1902 - சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் சமயத் தலைவர் (பி. 1863)
- 1934 - மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (பி. 1867)
[தொகு] சிறப்பு நாள்
- ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள்