1941
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள் |
ஆண்டுகள்: | 1938 1939 1940 - 1941 - 1942 1943 1944 |
1941 (MCMXLI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 21 - அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா படையினர் லிபியாவின் டோப்ருக் நகரைத் தாக்கினார். ஜனவரி 22 இல் இந்நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 6 - ஜெர்மனியினர் யூகொஸ்லாவியா மற்றும் கிறீஸ் நாடுகளைத் தாக்கினர்.
- ஏப்ரல் 18 - ஜெர்மனியத் துருப்புக்கள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் (Alexandros Koryzis) தற்கொலை செய்து கொண்டார்.
- ஜூன் 14 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
- ஜூன் 22 - ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியது.
- ஜூலை 4 - போலந்தின் லுவோவ் நகரில் ஜெர்மனியினர் பல அறிவியலாளர்களைக் கொன்று குவித்தது.
- நவம்பர் 19 - ஆஸ்திரேலிய கப்பல் HMAS Sydney மேற்கு அவுஸ்திரேலியாவில் மூழ்கியதில் 645 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- வழங்கப்படவில்லை