ஏப்ரல் 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டின் 115ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 116ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1607 - எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
- 1829 - மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர்.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
- 1898 - ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
- 1915 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டனர்.
- 1916 - அயர்லாந்தில் இராணுவச் சட்டத்தை ஐக்கிய இராச்சியம் பிறப்பித்தது.
- 1916 – அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
- 1945 - நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
- 1961 - ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1966 - தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
- 1974 - போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
- 1982 - காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
- 1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
- 1983 - ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் "ஹிட்லரின் நாட்குறிப்புகள்" நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் "ஸ்டேர்ன்" இதழ் வெளியிட்டது.
- 1986 - சுவாசிலாந்தின் மன்னனாக மூன்றாம் முசுவாட்டி முடிசூடினார்.
- 1988 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.
- 2005 - இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
- 2005 - ஜப்பானில் தொடருந்து விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1599 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர் (இ. 1658)
- 1840 - பியோத்தர் சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர். (இ. 1893)
- 1874 - மார்க்கோனி, வானொலியைக் கண்டு பிடித்தவர் (இ. 1937)
- 1906 - புதுமைப்பித்தன், நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடி (இ. 1948)
- 1940 - அல் பசீனோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
- 1976 - டிம் டங்கன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- அவுஸ்திரேலியா, நியூசிலாந்து - ஆன்சாக் நாள்
- போர்த்துக்கல் - விடுதலை நாள் (1974)
- இத்தாலி - நாசிகளிடம் இருது விடுதலை (1945)