1893
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1860கள் 1870கள் 1880கள் - 1890கள் - 1900கள் 1910கள் 1920கள் |
ஆண்டுகள்: | 1890 1891 1892 - 1893 - 1894 1895 1896 |
1893 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1893 MDCCCXCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1924 |
சீன நாட்காட்டி | 4589-4590 |
எபிரேய நாட்காட்டி | 5652-5653 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1948-1949 1815-1816 4994-4995 |
இரானிய நாட்காட்டி | 1271-1272 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1313-1314 |
ரூனிக் நாட்காட்டி | 2143
|
1893 (MDCCCXCIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 2 - வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- ஜனவரி 17 - ஹவாயில் அமெரிக்க காடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
- பெப்ரவரி 1 - தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.
- பெப்ரவரி 23 - ருடொல்ஃப் டீசல் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- பெப்ரவரி 28 - யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தொடருந்துப் பாதை அமைக்கும் திட்டத்துக்கான நில அளவை முடிவடைந்தது.
- மார்ச் 10 - ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.
- ஏப்ரல் 8 - முதலாவது கூடைப்பந்தாட்டம் பென்சில்வேனியாவில் ஆடப்பட்டது.
- மே 9 - தொமஸ் எடிசன் தனது முதலாவது 1½ அங்குல கினெட்டஸ்கோப்பை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தினார்.
- ஜூன் 7 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.
- ஜூன் 17 - மேற்கு அவுஸ்திரேலியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜூலை 6 - அயோவாவில் பொமெரோய் என்ற சிறு நகரம் சூறாவளியில் அழிந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 11 - ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக காப்புரிமம் பெற்றார்.
- ஆகஸ்ட் 27 - ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 11 - சிக்காகோவில் உலக சமய மாநாடு ஆரம்பமானது. செப்டம்பர் 27 இல் முடிவுற்றது.
- செப்டம்பர் 19 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
- செப்டம்பர் 19 - நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது.
- நவம்பர் 12 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
- டிசம்பர் 5 - மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
[தொகு] நாள் அறியப்படாதவை
- ஜனவரி - யாழ்ப்பாணத்தில் நெல்லுக்கான வரி அறவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
- பெப்ரவரி - கமலாம்பாள் சரித்திரம் நாவலை பி. ஆர். இராஜமையர் விவேக சிந்தாமணி இதழில் எழுதத் தொடங்கினார்.
- மே - சிலோன் ரிவியூ இதழ் வெளியானது.
- ஜூலை - யாழ்ப்பாண தொடருந்து சேவைக்கான நில அளவை ஆனையிறவு வரையில் விஸ்தரிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- மார்ச் 23 - ஜி. டி. நாயுடு, அறிவியல் மேதை
- ஜூன் 6 - கருமுத்து தியாகராஜன், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974)
- டிசம்பர் 26 - மா சே துங், சீனத் தலைவர் (இ. 1976)
- ந. சி. கந்தையாபிள்ளை, தமிழறிஞர் (இ. 1967)