See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பிரான்ஸ் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பிரான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

République française
பிரெஞ்சு குடியரசு
பிரான்சின் கொடி பிரான்சின் சின்னம்
குறிக்கோள்
Liberté, Égalité, Fraternité
பிரெஞ்சு:Liberty, Equality, Fraternity
நாட்டுப்பண்
La Marseillaise
Location of பிரான்சின்
தலைநகரம்
பெரிய நகரம்
பரிஸ்
48°51′N, 20°20′E
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசு ஒற்றையாட்சிக் குடியரசு
 -  அதிபர் சக் சிராக்
 -  பிரதமர் டொமினிக் டி விலெபின்
நிறுவப்படுதல் 843(வெர்டுன் ஒப்பந்தம்) 
பரப்பளவு
 -  மொத்தம் 674,843 கிமீ² (40வது)
260,558 சது. மை 
 -  நீர் (%) தகவல் சேர்க்க
மக்கள்தொகை
 -  சனவரி 2006 estimate 63,587,700 (20வது)
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $1.830 டிரில்லியன் (7வது)
 -  தலா/ஆள்வீதம் $29,316 (20வது)
ம.வ.சு (2003) 0.938 (உயர்) (16வது)
நாணயம் ஐரோ (€) (EUR)
நேர வலயம் மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (UTC+2)
இணைய குறி .fr
தொலைபேசி +33
மின்னழுத்தம் 230 V
அலையெண் 50 Hz

பிரான்ஸ் அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பொருநிலப் பரப்பானாது தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வட கடல் வரையும் விரிந்து காணப்படுகிறது.இதன் எல்லைகளாக பெல்ஜியம்,யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா மற்றும் ஸ்பெயின் என்பன காணப்படுகிறது.

பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைக் கொண்ட குடியரசாகும். பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் ஆரம்ப அங்கத்தவ நாடாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கிகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்றாகும். வருடாந்தம் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தரும் பிரான்ஸ் உலகில் மிக அதிகலவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடாக விளங்குகிறது. பிரான்ஸ் என்றப் பெயர் மேற்கு உரோமை இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய கோத்திர மக்களான பிராங்க் என்பவர்களில் இருந்து தோன்றியதாகும்.

பொருளடக்கம்

[தொகு] புவியியல்

பிரான்ஸ் நாட்டின் பிரதான பகுதி (பிரான்ஸ் பெருநிலப்பரப்பு) மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளப்போதும், பிரான்ஸ் வடக்கு அமெரிக்கா, கரிபியா, தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரம் மற்றும் அந்தாடிக்கா என்பற்றில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இவாட்சிப் பகுதிகள் பலவாரான அரசு முறைகளை கொண்டு இயங்குகின்றன.

பிரான்ஸ் பெருநிலப்பரப்பு பலவேறுப்பட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும், வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது.

பிரான்சின் கடல் கரையொன்று
பிரான்சின் கடல் கரையொன்று

மேற்கு ஐரோப்பாவில் மிக உயரமான மலையான பிளான்க் மலை (4810 மீட்டர்) பிரெஞ்சு அல்ப்சில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நெருக்கமான ஆற்றுத்தொகுதியொன்றையும் கொண்டுள்ளது.பிரான்சின் வெளி ஆட்சிப்பகுதிகள் காரணமாக உலக தரைப்பரப்பில் 0.45 சதவீதத்தை).[1] மட்டுமே அடைக்கும் பிரான்ஸ் உலகின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

லச்டெசு காட்டின் 100 மைல் நீளமான கடல் கரை
லச்டெசு காட்டின் 100 மைல் நீளமான கடல் கரை

[தொகு] வரலாறு

பிரான்சின் எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணலவாக ஒத்துப்போகிறது. கவுல் இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் குமு 1வது நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும் (இலத்தீன், இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது) கலாச்சாரத்தையும் தழுவிக்கொண்டனர். கிபி 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் இப்பிரதேசன்ங்களில் வேறூன்றத் தொடங்கியது கிபி 4வது நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய கிறிஸ்தவம்ம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார். ஐரோப்பிய மத்திய காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனை பயன்படுத்தி தமது நாட்டை "அதி கிறிஸ்தவ இராச்சியம் பிரன்ஸ்" என அழைத்தார்கள்.

[தொகு] குறிப்புகள்

  1. According to a different calculation cited by the Pew Research Center, the EEZ of France would be 10,084,201 square kilometres (3,893,532 sq mi), still behind the United States (12,174,629 km² / 4,700,651 sq mi), and still ahead of Australia (8,980,568 km² / 3,467,416 sq mi) and Russia (7,566,673 km² / 2,921,508 sq mi).

[தொகு] வெளியிணைப்பு

பிரான்ஸ் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கி நூல்
மேற்கோள்கள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கி மூலம்
படிமங்கள் காமன்ஸ்
செய்திகள் விக்கி செய்திகள்


ஜி8
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா
ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -