அக்டோபர் 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 8 கிரிகோரியன் ஆண்டின் 281வது நாளாகும். நெட்டாண்டுகளில் 282வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1871 - சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1895 - கொரியாவின் கடைசி அரசி "ஜோசியனின் மின்" ஜப்பானியர்களால் கொல்லப்பட்டு அவரது உடல் கையொங்பொக் அரண்மனையில் எரிக்கப்பட்டது.
- 1932 - இந்திய விமானப் படை நிறுவப்பட்டது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
- 1952 - லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 - கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.
- 2005 - 03:50 UTCக்கு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.
- 2006 - காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1992 - வில்லி பிரான்ட், ஜெர்மனி நாட்டு அதிபர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913).
- 1959 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930)
[தொகு] சிறப்பு நாள்
- குரொவேசியா - விடுதலை நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கொலம்பஸ் நாள்
- இந்தியா - விமானப் படை நாள்