மே 31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மே 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVIII |
மே 31 கிரிகோரியன் ஆண்டின் 151ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 152ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1223 - செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர்.
- 1889 - பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்.
- 1900 - பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகார்னஸ்பேக் நகரைக் கைப்பற்றின.
- 1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
- 1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
- 1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1921 - ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொல்லப்பட்டனர்.
- 1931 - பாகிஸ்தானின் குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி நகரைத் தாக்கின.
- 1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- 1970 - பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.
- 1981 - யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
- 2004 - வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 2005 - இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- 2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.
[தொகு] பிறப்புகள்
- 1048 - ஓமர் கையாம், பேர்சிய மெய்யியலாளர் (இ. 1131)
- 1911 - கே. சி. எஸ். பணிக்கர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர், (இ. 1977)
- 1931 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975)
[தொகு] இறப்புகள்
- 1809 - ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (பி. 1732)
- 1832 - கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1811)
- 1987 - ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (பி. 19937)
- 2004 - ஐயாத்துரை நடேசன், ஈழத்துப் பத்திரிகையாளர்