நீலாவணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீலாவணன் ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.
[தொகு] வாழ்வும் எழுத்தும்
- இயற்பெயர் : சின்னத்துரை
- பெற்றோர் :
- தங்கம்மா
- கேசகப்பிள்ளை - வைத்தியர்
- பிறப்பு : மே 31, 1931
- இறப்பு : ஜனவரி 11, 1975
- துணைவியார் : அழகேஸ்வரி
- பிள்ளைகள் :
- எழில்வேந்தன்
- எழிலரசி
- வினோதன்
- ஊர்மிளா
- கோசலா.
- இலக்கியப் பிரவேசம் :
- 1952 - பிராயச்சித்தம் (சிறுகதை)
- 1953 - ஓடிவருவதென்னேரமோ ? (கவிதை)
- ஈடுபட்ட துறைகள் :
- கவிதை
- சிறுகதை
- பாநாடகம்
- உருவகக்கதை
- விருத்தாந்த
- சித்திரம்
- கட்டுரை.
- வேறு புனைபெயர்கள் :
- நீலா-சின்னத்துரை
- அம்மாச்சி ஆறுமுகம்
- கொழுவுதுறட்டி
- வேதாந்தி
- நீலவண்ணன்
- எழில்காந்தன்
- இராமபாணம்
- சின்னான் கவிராயர்.
- வெளிவந்துள்ள நூல்கள் :
- வழி (கவிதைத் தொகுதி - சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது),
- வேளாண்மை (காவியம்)
- ஒத்திகை (கவிதைத் தொகுதி)
- ஒட்டுறவு (கதைத் தொகுதி)
- இதழாசிரியர் : பாடும்மீன்.