கொழும்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொழும்பு | |
உலக வர்த்தகமையம் கொழும்பு | |
மாகாணம் - மாவட்டம் |
- கொழும்பு |
அமைவிடம் | |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
37.31 ச.கி.மீ - 0-10 மீட்டர் |
கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி - நகரம் (2001) |
(1வது) - 17,096/ச.கி.மீ - 377,396 |
நகரத் தந்தை | உவைஸ் முகம்மது இம்தியாஸ் |
பதில் நகரத் தந்தை | எஸ். ராஜேந்திரன் |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 10001-10015 - +9411 - WP |
கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தக தலை நகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும், முஸ்லிம் வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கிபி 16வது நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.
கொழும்பில் அண்ணளவாக சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.
கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பஸை நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும்.
[தொகு] வலயங்கள்
கொழும்பு 15 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 1- கோட்டை
- கொழும்பு 2- கொம்பனித்தெரு
- கொழும்பு 3- கொள்ளுப்பிட்டி
- கொழும்பு 4- பம்பலப்பிட்டி
- கொழும்பு 5- ஹவ்லொக் நகரமும் நரஹேன்பிட்டியும்
- கொழும்பு 6- வெள்ளவத்தை
- கொழும்பு 7- கறுவாத்தோட்டம்
- கொழும்பு 8- பொறல்லை
- கொழும்பு 9- தெமட்டகொடை
- கொழும்பு 10- மருதானை
- கொழும்பு 11- புறக்கோட்டை
- கொழும்பு 12- ஹல்ஸ்டொஃப்
- கொழும்பு 13- கொட்டாஞ்சேனை
- கொழும்பு 14- கிரான்ட்பாஸ்
- கொழும்பு 15- மட்டக்குளி
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- கொழும்பு பல்கலைகழகம்
- கொழும்பு பங்கு சந்தை
- இலங்கை வானொலி
- வேத்தியர் கல்லூரி
[தொகு] வெளியிணைப்பு
- கொழும்பு தேசப்படம் (ஆங்கிலத்தில்)
உலகத்தமிழர் வாழ் நகரங்கள்| | |
---|---|
சென்னை | மதுரை | பெங்களூர் | யாழ்ப்பாணம் |கொழும்பு | ரொறன்ரோ | சிங்கப்பூர் | கோலாலம்பூர் | லா சப்பல் - பாரிஸ் | இலண்டன் |
|
||
---|---|---|
கொழும்பு | கண்டி | காலி | யாழ்ப்பாணம் | திருகோணமலை | குருநாகல் | அனுராதபுரம் | பதுளை | இரத்தினபுரி |
|
||
---|---|---|
கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |