மீட்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
SI அலகுகள் | |
---|---|
1 மீ | 100 சமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
3.281 அடி | 39.37 அங் |
மீட்டர் என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ ஆகும். முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்படுகிறது. இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்)
[தொகு] SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள்
மீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான SI முன்னொட்டுச் சொற்கள் கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
அடுக்கு | பெயர் | குறியீடு | அடுக்கு | பெயர் | குறியீடு | |
10−1 | டெசிமீட்டர் (டெசிமீ) | dm | 101 | டெக்காமீட்டர் (டெமீ) | dam | |
10−2 | செண்டிமீட்டர் (செமீ) (அ) சதம மீட்டர் |
cm | 102 | ஹெக்டோமீட்டர் (ஹெக்மீ) | hm | |
10−3 | மில்லிமீட்டர் (மிமீ) | mm | 103 | கிலோமீட்டர் (கிமீ) | km | |
10−6 | மைக்ரோமீட்டர் (மைமீ) | µm | 106 | மெகாமீட்டர் (மெமீ) | Mm | |
10−9 | நானோமீட்டர் (நாமீ) | nm | 109 | கிகாமீட்டர் (கிகாமீ) | Gm | |
10−12 | பைக்கோமீட்டர் (பைமீ) | pm | 1012 | டெர்ராமீட்டர் (டெர்மீ) | Tm | |
10−15 | ஃபெம்டோமீட்டர் (ஃபெர்மி) | fm | 1015 | பேட்டாமீட்டர் (பேமீ) | Pm | |
10−18 | அட்டோமீட்டர் (அமீ) | am | 1018 | எக்சாமீட்டர் (எக்மீ) | Em | |
10−21 | செப்டோமீட்டர் (செப்மீ) | zm | 1021 | சேட்டாமீட்டர் (சேமீ) | Zm | |
10−24 | யொக்டோமீட்டர் (யோக்மீ) | ym | 1024 | யொட்டாமீட்டர் (யோட்மீ) | Ym |