மார்ச் 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டின் 70ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 71ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 295 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1702 - முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது.
- 1801 - ரஷ்யாவின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் மன்னனானான்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
- 1864 - இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
- 1897 - மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
- 1902 - காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான 21 மைல் நீள புகையிரதப் பாதை அமைக்கப்பட்டது.
- 1905 - காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
- 1917 - முதலாம் உலகப் போர்: பக்தாத் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
- 1918 - ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
- 1931 - சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1958 - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.
- 1978 - ஒன்பது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் இஸ்ரேலில் பேருந்து ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
- 1985 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் தலைவரானார்.
- 1990 - லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
- 1998 - திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
- 2004 - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் தொடருந்துக் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
- 2007 - தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
[தொகு] பிறப்புக்கள்
- 1920 - நிக்கலாஸ் புளொம்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர்
[தொகு] இறப்புக்கள்
- 1955 - அலெக்சாண்டர் பிளெமிங், நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1881)
- 2002 - ஜேம்ஸ் டோபின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
- 2006 - சிலபதான் மிலொசேவிச், சேர்பியா, யூகொஸ்லாவியா அதிபர் (பி. 1941)
[தொகு] சிறப்பு நாள்
- சாம்பியா - இளைஞர் நாள்