நியூ சவுத் வேல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales, சுருக்கமாக NSW) அவுஸ்திரேலியாவின் மக்கள் அடர்த்தி கூடிய மாநிலமாகும். நாட்டின் தென்-கிழக்கே, விக்டோறியா மாநிலத்துக்கு வடக்கே, குயீன்ஸ்லாந்து மாநிலத்திற்கு தெற்கேயும் இது அமைந்துள்ளது. இம்மாநிலம் 1788இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இது அவுஸ்திரேலியாவின் அநேகமான பகுதிகளைக் கொண்டிருந்தாலும், பின்னர் தஸ்மேனியா 1825 இலும் தெற்கு அவுஸ்திரேலியா 1836 இலும், விக்டோறியா 1855 இலும் குயீன்ஸ்லாந்து 1859 இலும் பிரிக்கப்பட்டன. இவை அனைத்தும் பின்னர் 1901இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டன.
[தொகு] காலக்கோடு
- 1770: கப்டன் ஜேம்ஸ் குக் நியூ ஹொலண்ட் என்னும் பகுதியின் கிழக்குக் கரையை அடைந்து அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
- 1788: கப்டன் ஆர்தர் பிலிப் என்பவர் ஜக்சன் துறையில் பிரித்தானிய கைதிகள் கொலனியை உருவாக்கினார். இதுவே தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி ஆகும்.
[தொகு] வெளி இணைப்புக்கள்
- NSW State Law
- அரசினரின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
- நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றம்
- நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை
- Map of South East Australia from Geoscience Australia
- சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் காலநிலை