கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம்.
- கதைக்கோப்பு - Plot
- பாத்திரம் - Character
- உரையாடல் - Dialogue
- பின்னணி - Setting
- வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
- உத்திகள் - Techniques
- மேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting