டோக்கியோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
東京都 டோக்கியோ-டோ டோக்கியோ மாநகரம் |
|
டோக்கியோவில் ஷிஞ்சுகு வியாபாரப் பகுதி | |
ஜப்பானில் அமைவிடம் | |
நாடு | ஜப்பான் |
---|---|
மாகாணம் | கான்டோ பகுதி |
தீவு | ஹொன்ஷு |
அரசு | |
- ஆளுனர் | ஷின்டாரோ இஷிஹாரா |
பரப்பளவு | |
- நகரம் | 2,187.08 கிமீ² (844.4 சதுர மைல்) |
மக்கள் தொகை (2007) | |
- நகரம் | 12,790,000 |
- புறநகர் | 8,652,700 |
- புறநகர் அடர்த்தி | 5,796/கிமீ² (15,011.6/சதுர மைல்) |
இணையத்தளம்: metro.tokyo.jp |
டோக்கியோ ஜப்பான் நாட்டின் தலைநகராகும். மேலும் இது மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும். டோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 மில்லியன் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர். இது உலகில் மிகப்பெரியதும் சனத்தொகை கூடிய நகரங்களில் ஓன்றாகும். டோக்கியோ யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் அமைந்துள்ளது. யப்பனில் உள்ள நான்கு நபர்களில் ஓருவர் டோக்கியோவில் வாழ்கின்றனர். 100 க்கு மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளது. கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளிற்காகவும் பெருமளவு ஜப்பானியர்கள் இந்த நகரிற்கு குடி பெயருகின்றனர். பெரும்பாலான ஜப்பானிய கம்பனிகள் தமது தலைமை அலுவலகத்தை இங்கேயே அமைத்துள்ளனர்.
பொருளடக்கம் |
[தொகு] போக்குவரத்து
டோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) ஓசாகா மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன.
[தொகு] நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள்
டோக்கியோ மிக மோசமான புவி நடுக்க மற்றும் தீ விபத்துக்களை சந்தித்துள்ளது. இதில் குறிப்பிகத்தக்க விபத்து 1923 ல் ஏற்பட்டது. இதில் சுமார் 100,000 மக்கள் இறந்தனர். இதன் காரணமாக இங்கு வானுயர்ந்த கட்டடங்களை காண முடியாது.
[தொகு] உலக யுத்தம் II ன் பின்னர்
உலக யுத்தம் II ன் பின்னர் டோக்கியோவின் பெரும் பகுதி நேச படைகளின் (Allied bombing) தாக்குதலால் அழிவடைந்தது. இதன் பின்பு சுமார் ஏழு வருடங்கள் (1945-1952) அமெரிக்கப் படைகள் டோக்கியோவில் இருந்தன. 1964 ல் கோடைகால ஓலிம்பிக் போட்டிகளை நடத்தியது.
[தொகு] இன்று டோக்கியோ
டோக்கியோ உலகின் முன்னேறிய நகரமே ஆயினும் அதிகரிக்கும் சனத்தெகை பெரும் பிரச்சனையாக உள்ளது, அத்துடன் சூழல் மாசடைதலும் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. யப்பான் அரசு மக்களை நகரின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் படி ஊக்கம் அளிக்கின்றது.
உலகின்மிகப்பெரிய நகரங்கள் |
||
வரிசை |
நகரம் |
நாடு |
1 |
டோக்கியோ |
யப்பான் |
2 | மெக்சிகோசிட்டி | மெக்சிக்கோ |
3 | சா போலோ | பிரேசில் |
4 | நிவ்யார்க் |
ஐக்கியஅமேரிக்கா |
5 | மும்பாய் | இந்தியா |
6 |
லாஸ்ஏஞ்ஜல்ஸ் |
ஐக்கியஅமேரிக்கா |
7 | கொல்கத்தா | இந்தியா |
8 | சங்காய் | சீனா |
9 | டாக்கா | வங்காளதேசம் |
10 | டெல்லி | இந்தியா |
மூலம் அமேரிக்கசனத்தொகைகணக்கெடுப்புப்பிரிவு* 2000 ம் ஆண்டில் |