சிறுநீரகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிறுநீரகம் | |
---|---|
மனிதச் சிறுநீரகத்தின் முதுகுப்புறப் பார்வை. முள்ளந்தண்டு காட்டப்படவில்லை. | |
இலத்தீன் | ren |
கிரேயின் | |
தமனி | சிறுநீரகத் தமனி |
சிரை | சிறுநீரகச் சிரை |
நரம்பு | சிறுநீரகப் பின்னல் |
MeSH | சிறுநீரகம் |
Dorlands/Elsevier | k_03/12470097 |
சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். சிறுநீரகம், அது தொடர்பான நோய்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்யும் மருத்துவத் துறை சிறுநீரகவியல் எனப்படும்.
மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. இவை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம், ஈரலுக்குச் சற்றுக் கீழேயும், இடது சிறுநீரகம் திரைத்தசைக்குக் கீழே மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் ஒரு அண்ணீரகச் சுரப்பி அமைந்துள்ளது. ஈரலின் அமைவினால் வயிற்றுக்குழி சமச்சீரற்றதாக இருப்பதால், அதனுள் உள்ள வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்திலும் சற்றுத் தாழ்வாக அமைந்துள்ளது.