See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் நாடு மாநிலம் 4 கோடி அறுபது இலத்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
தமிழ் நாடு மாநிலம் 4 கோடி அறுபது இலத்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.[1][2]

பொருளடக்கம்

[தொகு] முதலமைச்சர்களின் பட்டியல்

[தொகு] சென்னை மாகாணம்

1909-ல் சென்னை மாகாணம் - தெற்குப் பகுதி
1909-ல் சென்னை மாகாணம் - தெற்குப் பகுதி

சென்னை மாகாணம் இன்றைய தமிழ் நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கிலேயரின் இந்திய ஆட்சிப்பகுதியாக இருந்தது.

சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் ஆற்காட் நவாப் உடன்படிக்கைக்கு பின்னர் Northern Circars தொடங்கி குமரி முனை வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய தலைமைச்செயலகம்[3] 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாலரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது . இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவை யின் ஆட்சிக்காலம் மூன்று வருடங்களாக இருந்தது. 132 உருப்பினர்களில் 34 உருப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்

இந்திய அரசு சட்டம், 1935 ன்படி 215 உருப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உருப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. சட்ட மேலவை (The legislative council)[4], எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உருப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.

1939-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் இந்தியா (British Raj | British government), மாகாண அரசாங்கங்களை கலந்து பேசாமலே இரண்டாம் உலகப்போரில் (World War II) இந்தியா பங்கேற்கும் என பிரகடணம் செய்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த முடிவை எதிர்த்து தன் கட்சியின் அனைத்து தேர்ந்தெடுகப்பட்ட பொறுப்பிலிருந்தவர்களையும் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகக் கோரியது.[5] 1946-ல் பின்னர் நடந்த மாகாண தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. [6]

#[7] பெயர் தொடக்கம் முடிவு முறை[8] கட்சி
1 ஏ. சுப்பராயலு 17 டிசம்பர், 1920 11 ஜூலை, 1921 1 நீதிக்கட்சி[9]
2 பனகல் ராஜா 11 ஜூலை, 1921 3 டிசம்பர், 1926 1 நீதிக்கட்சி[9]
3 பி. சுப்பராயன் 4 டிசம்பர், 1926 27 அக்டோபர், 1930 1 சுயேச்சை[9]
4 பி. முனுசுவாமி நாயுடு 27 அக்டோபர், 1930 4 நவம்பர், 1932 1 நீதிக்கட்சி[9]
5 ராமகிருஷ்ண ரங்காராவ் 5 நவம்பர், 1932 4 ஏப்ரல், 1936 1 நீதிக்கட்சி[9]
6 பி. டி. இராஜன் 4 ஏப்ரல், 1936 24 ஆகஸ்டு, 1936 1 நீதிக்கட்சி[9]
7 ராமகிருஷ்ண ரங்காராவ் 24 ஆகஸ்டு, 1936 1 ஏப்ரல், 1937 2 நீதிக்கட்சி[9]
8 கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு 1 ஏப்ரல், 1937 14 ஜூலை, 1937 1 நீதிக்கட்சி[10]
9 சி. இராஜகோபாலாச்சாரி 14 ஜூலை, 1937 29 அக்டோபர், 1939 1 இந்திய தேசிய காங்கிரஸ்
10 தங்குதுரை பிரகாசம் 30 ஏப்ரல், 1946 23 மார்ச்சு, 1947 1 இந்திய தேசிய காங்கிரஸ்
11 ஓ. பி. இராமசுவாமி ரெட்டியார் 23 மார்ச்சு, 1947 6 ஏப்ரல், 1949 1 இந்திய தேசிய காங்கிரஸ்
12 பூ. ச. குமாரசுவாமி ராஜா 6 ஏப்ரல், 1949 26 ஜனவரி, 1950 1 இந்திய தேசிய காங்கிரஸ்

[தொகு] சென்னை மாநிலம்

சி. இராஜகோபாலாச்சாரி (left) மற்றும் சி. என். அண்ணாத்துரை, statesmen முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர்கள்
சி. இராஜகோபாலாச்சாரி (left) மற்றும் சி. என். அண்ணாத்துரை, statesmen முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர்கள்

சென்னை மாநிலம், தற்போதைய தமிழ் நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாயிருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் முதன்முறையாக 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. [11] சென்னை மாநிலம் பிற்பாடு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலங்கள் மாறியமைப்புச் சட்டம், 1956-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பின் கேரள மாநிலமும், மைசூர் மாநிலமும் சென்னை மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் ஆந்திர சென்னை மாநிலங்கள் எல்லை மாற்றச் சட்டம், 1959ந் கீழ் ஏப்ரல் 1, 1960 முதல் திருத்தணி வட்டம் மற்றும் சித்தூர் வட்டத்தின் துனைவட்டமான பள்ளிப்பட்டு ஆகியவை சென்னை மாநிலத்தோடும், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களின் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தினோடும் இணைக்கப்பட்டன.[3]

#[7] பெயர் தொடக்கம் முடிவு முறை[8] கட்சி
1 பி. எஸ். குமாரசுவாமிராஜா 26 ஜனவரி, 1950 9 ஏப்ரல், 1952 1 இந்திய தேசிய காங்கிரஸ்
2 சி. இராஜகோபாலாச்சாரி 10 ஏப்ரல், 1952 13 ஏப்ரல், 1954 2 இந்திய தேசிய காங்கிரஸ்
3 கே. காமராஜ் 13 ஏப்ரல், 1954 31 மார்ச்சு, 1957 1 இந்திய தேசிய காங்கிரஸ்
4 கே. காமராஜ் 13 ஏப்ரல், 1957 1 மார்ச்சு, 1962 2 இந்திய தேசிய காங்கிரஸ்
5 கே. காமராஜ் 15 மார்ச்சு, 1962 2 அக்டோபர், 1963 3 இந்திய தேசிய காங்கிரஸ்
6 எம். பக்தவத்சலம் 2 அக்டோபர், 1963 6 மார்ச்சு, 1967 1 இந்திய தேசிய காங்கிரஸ்
7 சி. என். அண்ணாத்துரை 6 மார்ச்சு, 1967 ஆகஸ்டு, 1968 1 தி.மு.க.

[தொகு] தமிழ் நாடு

மு. கருணாநிதி, இன்றய தமிழக முதலமைச்சர்
மு. கருணாநிதி, இன்றய தமிழக முதலமைச்சர்

சென்னை மாகாணம் - 14 ஜனவரி 1969 அன்று தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[12] தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மாணம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் "தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986" (Tamil Nadu Legislative Council (Abolition) Act, 1986) எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 235 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.[4]

முதலமைச்சரின் பதவிக்காலம் சட்டப்பேரவையின் நம்பிக்கை அவர்மீது உள்ளவரை நீளூம். நம்பிக்கையில்லாத் தீர்மாணம் நிறைவேற்றப்படுமாயின் முதல்வராக இருப்பவர் பதவி விலகவேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைக்கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 பிரிவில் (Article 356) குறிப்பிட்டுள்ள ஒர் தகவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு. 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. [13] முதலமைச்சராக உள்ள ஒருவர் இரப்பதாலோ, பதவி விலகுவதாலோ அல்லது பதவி நீக்கம்செய்யப்பட்டாலோ உருவாகும் காலியிடத்திற்கு, மாநில ஆளுனர் மற்றொருவரை அமைச்சரவை அமைக்க அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மாணம் கொண்டுவரும்படி கெட்டுக்கொள்ளலாம். எவரொருவருக்கும் பெரும்பாண்மை இல்லாத நிலையில் அவை கலைக்கப்படும் அல்லது ஆளுனர் ஆட்சி அமைக்கப்படும் அல்லது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெரும்வரை இடைக்கால பொருப்பாட்சி அமையும் நிலை எற்படும்.

#[7] பெயர் தொடக்கம் முடிவு முறை[8] கட்சி
1 சி. என். அண்ணாத்துரை ஆகஸ்டு, 1968 3 பிப்ரவரி, 1969 1 தி.மு.க.
2 வீ. ஆர். நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)[12] 3 பிப்ரவரி, 1969 10 பிப்ரவரி, 1969 1 தி.மு.க.
3 மு. கருணாநிதி 10 பிப்ரவரி, 1969 4 ஜனவரி, 1971 1 தி.மு.க.
4 மு. கருணாநிதி 15 மார்ச்சு, 1971 31 ஜனவரி, 1976 2 தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி[12] 31 ஜனவரி, 1976 30 ஜூன், 1977
5 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி 17 பிப்ரவரி, 1980 9 ஜூன், 1980
6 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.இ.அ.தி.மு.க.
7 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.இ.அ.தி.மு.க.
8 வீ. ஆர். நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)[12] 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 தி.மு.க.
9 ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி 30 ஜனவரி, 1988 27 ஜனவரி, 1989
10 மு. கருணாநிதி 27 ஜனவரி, 1989 30 ஜனவரி, 1991 3 தி.மு.க.
குடியரசுத் தலைவர் ஆட்சி 30 ஜனவரி, 1991 24 ஜூன், 1991
11 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க.
12 மு. கருணாநிதி 13 மே, 1996 13 மே, 2001 4 தி.மு.க.
11 ஜெ. ஜெயலலிதா[14] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க.
12 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க.
13 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[14] அ.இ.அ.தி.மு.க.
14 மு. கருணாநிதி 13 மே, 2006 incumbent 5 தி.மு.க.

[தொகு] காலவரிசை

[தொகு] குறிப்பிடத்தக்க பதிவுகள்

எம். ஜி. இராமச்சந்திரன், மிக நீண்ட காலம் தொடர்ந்து பொறுப்பிலிருந்த தமிழக முதல்வர் (1977–1987)
எம். ஜி. இராமச்சந்திரன், மிக நீண்ட காலம் தொடர்ந்து பொறுப்பிலிருந்த தமிழக முதல்வர் (1977–1987)


[தொகு] அடிக்குறிப்புகளும் உசாத்துணைகளும்

  1. தமிழ் நாடு அரசு (Government of Tamil Nadu) — தமிழக முதலமைச்சர்கள் (Chief Ministers of Tamil Nadu since 1920)
  2. Government of Tamil Nadu — Assemblies — An Overview
  3. 3.0 3.1 தமிழ் நாடு அரசு — தலைமைச் செயலகம் — சுருக்கமான வரலாறு
  4. 4.0 4.1 Legislative bodies of India - Tamil Nadu Legislative Assembly
  5. The Telegraph - Own Goal - Partition became inevitable once the Congress resigned in 1939
  6. Pakistan - toward partition
  7. 7.0 7.1 7.2 The colours indicate the political party affiliation of each Chief Minister.
  8. 8.0 8.1 8.2 The ordinal number of the term being served by the person specified in the row in the corresponding period
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 World Statesmen.org — Provinces of British India
  10. Justice party was in power except for a brief period. (apparently that of P. Subbarayan) The Congress fought the elections for the first time in the Madras Presidency in 1937. Therefore, this tenure should have been that of the Justice Party.
  11. தமிழ்நாடு அரசு — மாநில சட்டப் பேரவை — துவக்கமும், படிமலர்ச்சியும்
  12. Cite error: Invalid <ref> tag; no text was provided for refs named worldstatesmen
  13. The Hindu - Delhi's warning
  14. 14.0 14.1 On செப்டம்பர் 21, 2001, a five-judge constitutional bench of the Supreme Court of India ruled in a unanimous verdict that "a person who is convicted for a criminal offence and sentenced to imprisonment for a period of not less than two years cannot be appointed the Chief Minister of a State under Article 164 (1) read with (4) and cannot continue to function as such". Thereby, the bench decided that "in the appointment of Ms. Jayalalithaa as Chief Minister there has been a clear infringement of a Constitutional provision and that a writ of quo warranto must issue". In effect her appointment as Chief Minister was declared null and invalid in retrospect. Therefore, technically, she was not the Chief Minister in the period between மே 14, 2001 and செப்டம்பர் 21, 2001 (The Hindu — SC unseats Jayalalithaa as CM, full text of the judgment from official Supreme Court site).

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

  • தமிழ்நாட்டின் வரலாறு
  • இந்திய முதலமைச்சர்கள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -