மிதிவண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மிதிவண்டிகள் மிதிக்கட்டைகளால் உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் வண்டிகள் ஆகும். மிதிவண்டிகளில் ஒன்றின் பின் இன்னொன்றாக இரு சக்கரங்கள் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின். தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனா மற்றும் நெதர்லாந்தில், போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்