இலத்தீன் அமெரிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலத்தீன் அமெரிக்கா
பரப்பளவு | 21,069,501 கிமீ² |
---|---|
மக்கள் தொகை | 562 மில்லியன் |
நாடுகள் | 20 |
சார்பு பகுதிகள் | 10 |
மொ.உ.உ. | $3.33 டிரில்லியன் (exchange rate) $5.62 டிரில்லியன் (purchasing power parity) |
மொழிகள் | எசுப்பானியம், போர்த்துக்கீசம், கிச்சுவா, அய்மாரா, நவாட்டில், மாய மொழிகள், குவரானி, இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஹெய்ட்டிய கிரியோல், எசுப்பானியக் கிரியோல், ஜெர்மன், வெல்ஷ், டச்சு, கான்டொனீச சீனம், ஜப்பானியம், வியட்நாம், மற்றும் பல்வேறு மொழிகள் |
நேர வலயங்கள் | UTC -2:00 (பிரசில்) to UTC -8:00 (மெக்சிகோ) |
பெரிய நகரங்கள் | 1. மெக்சிகோ நகரம் 2. சாவ் பாவ்லோ 3. புவெனஸ் ஐரிஸ் 4. ரியோ டி ஜனேரோ 5. லிமா 6. பொகொட்டா 7. சான்ட்டியாகோ 8. பெலோ ஹொரிசொன்ட்டே 9. கராக்கஸ் 10. மொன்ட்டெறே |
அமெரிக்க கண்டங்களில் ரோமானிய மொழிகளை பேசும் பகுதி இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்படும். பொதுவாக எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கீசம் பேசும் நாடுகள் இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்பட்டன. மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் கரிபியக் கடலில் கியூபா, டொமினிக்கன் குடியரசு ஆகிய தீவு நாடுகளும் அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ பொதுநலவாயமும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ளன.