விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
ஜனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - ஜூன் - ஜூலை - ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்
இப்போது 11:47 மணி செவ்வாய், ஜூன் 24, 2008 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
- 1840 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
- 1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1993 - இலங்கை அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா (படம்) மே நாள் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 30 – ஏப்ரல் 29 – ஏப்ரல் 28
- 1519 - இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி (படம்) இறப்பு.
- 1889 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.
அண்மைய நாட்கள்: மே 1 – ஏப்ரல் 30 – ஏப்ரல் 29
மே 3: உலக பத்திரிகை சுதந்திர நாள்
- 1939 - சுபாஸ் சந்திர போஸ் (படம்) அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.
- 1941 - பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
- 1986 - கொழும்பு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.
அண்மைய நாட்கள்: மே 2 – மே 1 – ஏப்ரல் 30
மே 4: அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள், சீனா - இளைஞர் நாள்
- 1799 - மைசூர் மன்னன் திப்பு சுல்தான் (படம்) பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டான்.
- 1886 - சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவதுறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 1949 - அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
அண்மைய நாட்கள்: மே 3 – மே 2 – மே 1
மே 5: டென்மார்க், எதியோப்பியா, நெதர்லாந்து - விடுதலை நாள்
- நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் (1948), நகைச்சுவை எழுத்தாளர் தேவன் (1957) இறப்பு.
- 1961 - மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பார்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.
- 1981 - ஐரிஷ் புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் (படம்) சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
அண்மைய நாட்கள்: மே 4 – மே 3 – மே 2
மே 6:
- 1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
- 1889 - ஈபெல் கோபுரம் (படம்) பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
- 1994 - ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மே 5 – மே 4 – மே 3
மே 7: ரஷ்யா, பல்கேரியா - வானொலி நாள்
- 1539 - சீக்கிய மதத்தை ஆரம்பித்த குரு நானக் (படம்) இறப்பு.
- 1895 - ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார்.
- 1915 - பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற கப்பலை ஜெர்மனிய நாசகார நீர்மூழ்கிக் கப்பல் 1,198 பயணிகளுடன் மூழ்கடித்தது.
அண்மைய நாட்கள்: மே 6 – மே 5 – மே 4
மே 8: உலக செஞ்சிலுவை நாள், ஐரோப்பா - வெற்றி நாள் (1945)
- 1902 - கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 - கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர் (படம்).
அண்மைய நாட்கள்: மே 7 – மே 6 – மே 5
மே 9: ரஷ்யா, ஆர்மேனியா - வெற்றி நாள்
- 1502 - கொலம்பஸ் (படம்) புதிய உலகிற்கான தனது கடைசிக் கடல் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
- 1956 - உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
அண்மைய நாட்கள்: மே 8 – மே 7 – மே 6
- 1857 - சிப்பாய்க் கிளர்ச்சி (படம்): இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
- 1946 - ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
- 1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
அண்மைய நாட்கள்: மே 9 – மே 8 – மே 7
- 1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரித்தானியப் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1857 - இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரவுணியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
அண்மைய நாட்கள்: மே 10 – மே 9 – மே 8
- 1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.
- 1942 - 1,500 யூதர்கள் போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
- 1982 - போர்த்துகலில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போலைக் (படம்) கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
அண்மைய நாட்கள்: மே 11 – மே 10 – மே 9
- தமிழில் முதல் நாவலை வெளியிட்ட பி. ஆர். ராஜமய்யர் (1898); தவில் மேதை வி. தெட்சணாமூர்த்தி (படம்) (1978) இறப்பு.
- 1969 - மலேசியாவில் கோலாலம்பூரில் சீனர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
- 2006 - யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
அண்மைய நாட்கள்: மே 12 – மே 11 – மே 10
- 1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் (படம்) அறிமுகப்படுத்தினார்.
- 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் பிஜியை அடைந்தனர்.
- 1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.
அண்மைய நாட்கள்: மே 13 – மே 12 – மே 11
மே 15: பராகுவே - விடுதலை நாள் (1811)
- 1618 - கெப்லர் (படம்) முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
- 1955 - உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
- 1985 - குமுதினிப் படுகொலைகள்: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மே 14 – மே 13 – மே 12
மே 16: மலேசியா - ஆசிரியர் நாள்
- 1932 - பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1969 - சோவியத்தின் வெனேரா 5 (படம்) விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.
- 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மே 15 – மே 14 – மே 13
மே 17: நோர்வே - அரசியல் நிர்ணய நாள்
- 1498 - வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
- 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
- 2007 - தமிழ் மூத்த எழுத்தாளர் நகுலன் (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மே 16 – மே 15 – மே 14
- 1896 - ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாசின் (படம்) முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
- 1974 - இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்து உலகின் ஆறாவது அணுசக்தி வல்லரசானது.
- 1980 - வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
அண்மைய நாட்கள்: மே 17 – மே 16 – மே 15
மே 19: உக்ரேன் - அறிவியல் நாள்
- 1649 - இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
- 1848 - கலிபோர்னியா, நெவாடா, யூட்டா உட்பட பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது.
- 1904 - இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்செட்ஜி டாட்டா (படம்) இறப்பு.
அண்மைய நாட்கள்: மே 18 – மே 17 – மே 16
மே 20: கிழக்குத் தீமோர் - விடுதலை நாள் (2002)
- 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொடகாமா (படம்) இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்து தூர கிழக்கிற்கான வணிகத்தை ஆரம்பித்தார்.
- 1605 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
- 1995 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.
அண்மைய நாட்கள்: மே 19 – மே 18 – மே 17
- 1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி (படம்) ஸ்ரீபெரும்புதூரில் மனிதக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 1991 - எத்தியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 2003 - வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மே 20 – மே 19 – மே 18
மே 22: யேமன், இலங்கை - தேசிய நாள்
- 1906 - ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் (படம்) பெற்றனர்.
- 1958- இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
அண்மைய நாட்கள்: மே 21 – மே 20 – மே 21
- 1906 - நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் (படம்) இறப்பு.
- 1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
- 1998 - புனித வெள்ளி அமைதி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
அண்மைய நாட்கள்: மே 22 – மே 21 – மே 20
மே 24: எரித்திரியா - விடுதலை நாள் (1993)
- 1798 - அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.
- 1883 - நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் (படம்) திறந்து விடப்பட்டது. அந்நாளில் இதுவே மிக நீளமான தொங்கு பாலமாகும்.
- 2007 - ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்து 35 கடற்படையினரைக் கொன்றனர்.
அண்மைய நாட்கள்: மே 23 – மே 22 – மே 21
மே 25: லெபனான் - விடுதலை நாள் (2000)
- 1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.
- 1977 - அறிவியல் சார்ந்த பல சாகசங்கள் நிறைந்த ஸ்டார் வார்ஸ் (படம்) திரைப்படம் வெளிவந்தது.
- 1985 - வங்காள தேசத்தைத் தாக்கிய சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மே 24 – மே 23 – மே 22
மே 26: அவுஸ்திரேலியா - தேசிய மன்னிப்பு நாள், ஜோர்ஜியா - தேசிய நாள்
- 1799 - ரஷ்யக் கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின் (படம்) பிறப்பு.
- 1838 - கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மே 25 – மே 24 – மே 23
- 1964 - முதலாவது இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு (படம்) இறப்பு.
- 1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் ஒப்புதல் அளித்தனர்.
- 2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மே 26 – மே 25 – மே 24
மே 28: அசர்பைஜான், ஆர்மீனியா - குடியரசு நாள்
- 1588 - 30,000 பேர்களுடன் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன (படம்).
- 1815 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்தது.
- 1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
அண்மைய நாட்கள்: மே 27 – மே 26 – மே 25
மே 29: நைஜீரியா - மக்களாட்சி நாள் (1999)
- 1892 - பஹாய் சமயத்தைத் தோற்றுவித்த பஹாவுல்லா (படம்) இறப்பு.
- 1953 - முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.
- 1999 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.
அண்மைய நாட்கள்: மே 28 – மே 27 – மே 25
- 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் (படம்) ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.
- 1815 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் 372 பேர் கொல்லப்பட்டனர்.
- 1845 - திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.
அண்மைய நாட்கள்: மே 29 – மே 28 – மே 26
பார் –
மே 31: புகையிலை எதிர்ப்பு நாள்
- 1902 - நான்கு குடியேற்ற நாடுகளை ஒன்றிணைத்து தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. இதே நாளில் 1961 இல் இது பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகி தென்னாபிரிக்கக் குடியரசு ஆனது.
- 1981 - தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் (படம்) நள்ளிரவு நேரம் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
- 2004 - இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அண்மைய நாட்கள்: மே 30 – மே 29 – மே 28
பார் –