நெல்சன் மண்டேலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு - ஜூலை 18, 1918), மக்களாட்சி (சனநாயக) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது. மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
[தொகு] பெற்ற விருதுகள்
- 1993 - அமைதிக்கான நோபல் பரிசு.
- 2006 - மனச்சாட்சியின் தூதுவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் அதி கௌரவ விருது.
[தொகு] மேலும் படிக்க
- Anthony Sampson; Mandela: the authorized biography; ISBN 0-6797-8178-1 (1999)
- Nelson Mandela; Long Walk to Freedom: The Autobiography of Nelson Mandela; Little Brown & Co; ISBN 0-3165-4818-9 (paperback, 1995)