See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
புலி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புலி
Bengal Tiger (P. tigris tigris)
Bengal Tiger (P. tigris tigris)
காப்பு நிலை

அருகிவிட்டது [1]
அறிவியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைப் பேரினம்
பேரினம்: பாந்த்தரா (Panthera)
இனம்: பி.டைகிரிசு
இருசொற்பெயர்
பாந்த்தரா டைகிரிசு(Panthera tigris)
(லின்னேயசு, 1758)
புலிகளின் வரலாற்றுப் பரவல் (வெளிர் மஞ்சள்) மற்றும் 2006 (பச்சை).
புலிகளின் வரலாற்றுப் பரவல் (வெளிர் மஞ்சள்) மற்றும் 2006 (பச்சை).[2]
Synonyms
பெலிசு டைகிரிசு லின்னேயசு, 1758

Tigris striatus Severtzov, 1858

டைகிரிசு ரிகேலிசு கிரே, 1867
வங்காளப் புலி
வங்காளப் புலி

புலி ஒரு காட்டு விலங்காகும். உடலில் இருக்கும் பட்டை பட்டையான அமைப்பை வைத்துப் புலிகளை அடையாளம் காணலாம். காட்டுக்குள் சராசரியாக 15 வருடங்கள் வாழும் புலிகள் காடு அல்லாத சூழ்நிலையில் வாழும் காலம் 16 முதல் 18 வயது வரையே. நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் புலிகளுக்கு ஆற்றல் அதிகம். 6-8 கிமீ. அகலமுள்ள நதிகளைச் சர்வசாதாரணமாக நீந்தவல்ல புலிகளால் 29 கிமீ வரை நீந்த இயலும். தாக்குதல் காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதவிதமான தகவல் தொடர்பைப் புலிகள் கையாளுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். வங்காளப் புலி இந்தியாவின் தேசிய விலங்காகும்.

பொருளடக்கம்

[தொகு] வாழிடமும் பரம்பலும்

பொதுவாகப் புலிகள் காடுகளிலும் புல்வெளிகளிலும் வாழ்கின்றன. மேலும் தனது இரையை இவை தனியாகவே சென்று வேட்டையாடுகின்றன. புலிகள் நன்றாக நீந்த வல்லவை. இவை குளம், ஏரி, ஆறுகளில் பொதுவாகக் குளிக்கின்றன. பெரும்பாலும் பெரிய, நடுத்தரமான தாவர உண்ணிகளான மான், காட்டுப்பன்றிகள் போன்றவற்றை உண்கின்றன. உலகில் உள்ள மொத்தப் புலிகளில் இராயல் பெங்கால் புலி எனப்படும் வங்காளப் புலிகளே 80% ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகின்றன. புலிகள் ஆசிய நாடுகளிலேயே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. பங்களாதேஷ், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், நேபாளம், வடகொரியா, ரஷ்யா, சுமத்ரா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இவை காணப்படுகின்றன.

[தொகு] வகைகள்

  • வங்கப்புலி அல்லது இராயல் பெங்கால் புலி
  • இந்தியசீனப் புலி
  • மலாய்ப்புலி
  • சுமத்திராப் புலி
  • சைபீரியப் புலி
  • தென்சீனப் புலி

[தொகு] உடலமைப்பு

புலிகளே பூனைக்குடும்பத்தில் மிகப்பெரிய விலங்காகும். பொதுவாக ஆண் புலிகள் 200-இல் இருந்து 320 கிலோ எடை வரையும் பெண் புலிகள் 120-இல் இருந்து 181 கிலோ வரையும் கொண்டுள்ளன. புலிகளில் சைபீரியப்புலிகள் மிகவும் பெரியவை. சுமத்திராப் புலிகள் சிறியவை. புலிகளின் உடல் நீளம் சுமார் எழு முதல் பன்னிரண்டு அடி வரை இருக்கும்.

[தொகு] நாட்டு விலங்காக புலி

  • பங்களாதேஷ் (வங்காளப்புலி அல்லது இராயல் பெங்கால் புலி)
  • சீனா (டிராகன் மற்றும் பாண்டாவுடன். புலி அதிகாரப்பூர்வற்ற குறியீடு)
  • இந்தியா (வங்காளப்புலி அல்லது இராயல் பெங்கால் புலி)
  • மலேசியா
  • நேபாளம் (வங்காளப்புலி அல்லது இராயல் பெங்கால் புலி)
  • வட கொரியா (சைபீரியப் புலி)
  • தென்கொரியா

[தொகு] இந்தியாவிலுள்ள புலிகள் காப்பகங்கள் (மாநிலங்கள் வாரியாக )

அஸ்ஸாம்

  • காசிரங்கா
  • மானஸ்
  • நமெரி

அருணாச்சல் பிரதேசம்

  • நம்தாபா
  • பக்குய்

ஆந்திரப் பிரதேசம்

  • நாகர்சுன்சகார்-ஸ்ரீசைலம்

பீகார்

  • வால்மீகி

சட்டிஸ்கர்

  • இந்திராவதி

ஜார்கண்ட்

  • பலமு

கர்நாடகம்

  • பந்திபூர்-நாகரகொளை
  • பத்திரா

கேரளா

  • பெரியார்

மத்தியப் பிரதேசம்

  • கானா
  • மேல்க்கட
  • பந்தவ்கர்
  • போரி -சத்புரா
  • பன்னா
  • பென்ச்

மகாராஷ்டிரா

  • பென்ச்
  • மேல்காட்
  • தடோபா அந்தேரி

ராஜஸ்தான்

  • ரந்தம்ப்தோர்
  • ஷரிஷ்கா

தமிழ் நாடு

  • களகாடு முண்டந்துறை

மிசோரோம்

  • தாம்பா

ஒரிசா

  • சிமிளிபால்
  • ரந்தம்போர

உத்திரப் பிரதேசம்

  • துத்வா கடேர்னியாகாட்

உத்திராஞ்சல்

  • கார்பெட்


மேற்கு வங்காளம்

  • சுந்தர்பன்
  • பக்க்ஷா

[தொகு] மேலும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. Cat Specialist Group (2002). Panthera Tigris. 2006 IUCN Red List of Threatened Species. IUCN 2006. Retrieved on 10 May 2006. Database entry includes justification for why this species is endangered.
  2. Save The Tiger Fund | Wild Tiger Conservation


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -