See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
முதுகுநாணி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

முதுகுநாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முதுகுநாணி (Chordates)
புதைபடிவக்காலம்: கேம்பிரியன் – அண்மை
மஞ்சள் சிறை டூனா மீன், Thunnus albacares
மஞ்சள் சிறை டூனா மீன்,
Thunnus albacares
அறிவியல் வகைப்பாடு
உலகம்: யூகார்யோட்
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
துணைத்திணை: யூமேட்டாசோவா
(Eumetazoa)

(unranked) இருபக்கமிகள்
(Bilateria)
Superphylum: டியூட்டெரோஸ்டோமியா
(Deuterostomia)

தொகுதி: முதுகுநாணி
(Chordata)

வில்லியம் பேட்ஸன்
(William Bateson), 1885
வகுப்புகள்

See below

முதுகுநாணிகள் (Chordates) என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு அல்லது தொகுதி. இத் தொகுதியைச் சேர்ந்த உயிரினங்கள் கருவிலிருந்து வளர்ச்சி பெறும்பொழுது ஒருநிலையில் உடலின் அச்சு போன்ற ஒரு முதுகு நாண் கொண்டிருக்கும். இதனாலேயே இவற்றிற்கு முதுகுநாணி என்று பெயர்.

இந்த விலங்கினத் தொகுதி (phylum) மூன்று துணைத்தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன:

  • டியுனிக்கேட் (tunicate) அல்லது உரோகோர்டேட்டா (Urochordata) எனப்படும் அடுக்கிதழ் கடல் வடிகட்டி உறிஞ்சான்கள்
  • லான்செலெட் (lancelet) அல்லது தலைகொள் முதுகுநாணிகள் (Cephalochordata)
  • முதுகெலும்பிகள் (vertebrate)

உரோகோர்டேட்டா என்னும் அடுக்கிதழ் வடிகட்டி உறிஞ்சான்களின் புழுநிலையில் முதுகுநாணும், நரம்புகள் கற்றையும் உண்டு ஆனால் அவை முழு வளர்ச்சி அடைந்தவுடன் மறைந்துவிடுகின்றன. தலைகொள் முதுகுநாணிகளுக்கு அச்சுபோன்ற முதுநாணும், தண்டுவடம் போன்ற நரம்புக்கற்றையும் உண்டு, ஆனால் முள்ளெலும்பாகிய முதுகெலும்பு கிடையாது. மண்டை ஓடு உள்ள ஆனால் முதுகெலும்பில்லா ஆரல்மீன்வகை போன்ற ஹாகுமீன் (Hagfish) தவிர மற்றெல்லா முதுகெலும்பிகளிலும் முதுகில் நரம்புக்கற்றைக்கான (தண்டுவடம்) குழாய் போன்ற பகுதியைச் சுற்றி குருத்தெலும்போ முள்ளெலும்போ வளர்ந்திருக்கும்.

தற்பொழுது உயிர்வாழும் முதுகுநாணிகளுக்குத் தொடர்பான கிளை உயிரினங்களை கீழே உள்ள வகைப்பாட்டுக் கிளைப்படம் காட்டும். இதில் காட்டப்பட்டுள்ள சில உயிரின வகைப்பாட்டு உறுப்பினங்கள் மரபுவழியான வகுப்புகளுடன் இணங்கி இருப்பதில்லை. மிகப்பரவலான முதுகுநாணிகளை ஒழுங்குடன் வகைப்படுத்துவதில் இன்னமும் குழப்பங்கள் உள்ளன. ஒருசில உயிரினங்களுக்கிடையே உள்ள உறவுகளும் தெளிவாகவில்லை.


பொருளடக்கம்

[தொகு] உயிரின வகைப்பாடு

[தொகு] வகைப்பாட்டுப் பெயரியல்

கீழ்க்காணும் முறை Vertebrate Palaeontology (முதுகெலும்பியின் தொல்லுயிரியல் பாகுபாடு) என்னும் நூலின் மூன்றாவது பதிப்பினைப் பின்பற்றியதுVertebrate Palaeontology.[1] படிவளர்ச்சியில் முறைப்படி உள்ள உறவுகளைக் காட்டுவதாயினும், மரபுவழி உள்ள தொடர்புகளையும் (லின்னேயின் பெயரீட்டுமுறை) காட்டுகின்றது.

  • முதுகுநாணி தொகுதி (Phylum Chordata)
    • துணைத்தொகுதி உரோக்கோர்டேட்டா — (அடுக்கிதழ் வடிகட்டி உறிஞ்சான்கள், 3,000 இனங்கள்)
    • துணைத்தொகுதி தலைகொள் முதுகுநாணிகள் — (லான்செலெட்,lancelets, 30 இனங்கள்)
    • துணைத்தொகுதி முதுகெலும்பிகல் (Craniata) (முதுகெலுபிகள் 57,674 இனங்கள்)
      • வகுப்பு 'தாடையிலிகள்'* (தாடையில்லா முதுகெலும்பிக்ள்; 100+ species)
        • துணைவகுப்பு Mixinoidea (hagfish; 65 இனங்கள்)
        • துணைவகுப்பு Petromyzontida (Lampreys)
        • துணைவகுப்பு Conodonta
        • துணைவகுப்பு Pteraspidomorphi (Paleozoic தாடையில்லா மீன்கள்)
        • வரிசை Anaspida
        • வரிசை Thelodonti (Paleozoic தாடையில்லா மீன்கள்)
        • உள்தொகுப்பு Gnathostomata (தாடையுள்ள முதுகெலும்பிகள்)
          • வகுப்பு Placodermi (Paleozoic காப்புடல்)
          • வகுப்பு Chondrichthyes (குருத்தெலும்பு மீன்கள்; 900+ இனங்கள்)
          • வகுப்புAcanthodii (Paleozoic "spiny sharks")
          • வகுப்பு Osteichthyes (bony fishes; 30,000+ இனங்கள்)
              • துணைவகுப்பு Actinopterygii (திருக்கை போன்ற மீன்கள்; ஏறத்தாழ 30,000 இனங்கள்)
              • துணைவகுப்பு Sarcopterygii (lobe-finned fish)
            • மேல்வகுப்பு Tetrapoda (நான்கு கால்களுள்ள முதுகெலும்பிகள்; 18,000+ இனங்கள்)
              • வகுப்பு Amphibia (நிலநீர்வாழ்விகள்; 6,000 இனங்கள்)
              • Series Amniota (with amniotic egg)
                • வகுப்பு Sauropsida — (ஊர்வன; 8,225+ species)
                  • வகுப்பு Aves (பறவை; 8,800–10,000 species)
                • வகுப்பு Synapsida (பாலூட்டி போன்ற "ஊர்வன"; 4,500+ species)

[தொகு] உயிரினவகைப்பாடு

முதுகுநாணிகள் (Chordata)
 அடுக்கிதழ் உறிஞ்சான்கள் (Tunicata) 

 Appendicularia (formerly Larvacea)



 Thaliacea 



 Ascidiacea 




 தலைகொள் முதுகுநாணிகள்(Cephalochordata)


 Craniata 

Myxini


 முதுகெலும்பிகள் 

 Conodonta†



 Cephalaspidomorphi†



 Hyperoartia



 Pteraspidomorphi†


 Gnathostomata 

 Placodermi†



 Chondrichthyes


 Teleostomi 

 Acanthodii†


 Osteichthyes 

 Actinopterygii


 Sarcopterygii 
void
 நாற்கால் விலங்குகள்(Tetrapoda) 

 நிலநீர் வாழிவிகள்Amphibia]]


 Amniota 
 Synapsida 
void

 பாலூட்டிகள்




 Sauropsida 
void

 பறவை















Note: Lines show probable evolutionary relationships, including extinct taxa, which are denoted with a dagger, †. Some are invertebrates. Chordata is a phylum.

[தொகு] முதல் தோற்றம்

முதுகுநாணிகள் முதன்முதல் எவ்வாறு தோன்றின என்று அறியக்கிடைக்கவில்லை. கேம்பிரியன் காலத்தில் (ஏறத்தாழ 542± 0.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 488.3± 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வரைஉள்ள காலம்) இருந்து அறியப்பட்ட லான்செலெட் போன்ற மீனின் முன்நிலை போன்ற உயிரினங்கள்தான் தெளிவாக அறியப்பட்ட வகைகள். முதன்முதல் தோன்றியதாகக் கூறப்படும் கருத்துகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றில் ஒட்டியதாக இருக்கும்.

  • நீரின் அடியே உள்ள படிவுகளில் வாழும் தட்டையான உடலுடன் நீஞ்சவல்ல செதிளுடைய புழு போன்ற விலங்குகள்
  • தண்டற்ற ஆனால் குழாய் போன்ற நீஞ்சவல்ல வடிகட்டி உண்ணிகள். இவை அடுக்கிதழ் உறிஞ்சான்கள் (Tunicates) என்றும் அழைக்கப்படும்.
  • நீரில் அசைந்து நகரும் அல்லது நீஞ்சும் தன்மை கொண்ட புழுநிலை (larva) உயிரியாக இருந்து பின்னர் முழு வளர்ச்சி அடைந்தபின்னும் நீஞ்சும் திறத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது.

நெளிந்து நெளிந்து நீஞ்சுவதற்கு ஏற்றவாறு தசைகள் இறுகிச்சுருங்குவதற்கு உகந்தவாறு முதுகுநாணியின் கெட்டித்தன்மை அல்லது உறுதித்தன்மை வளர்ச்சி அடைந்தது.

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -