See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தொல்பொருளியல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தொல்பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால ரோமில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால ரோமில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
ரோமன் அரங்கு, அலெக்சாந்திரியா, எகிப்து
ரோமன் அரங்கு, அலெக்சாந்திரியா, எகிப்து

தொல்பொருளியல் (Archaeology) என்பது, கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மனித மிச்சங்கள், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய படிப்பாகும்.


தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.


தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

[தொகு] கல்விசார் துணைத் துறைகள்

காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க.

  • ஆபிரிக்கத் தொல்பொருளியல்
  • அமெரிக்காக்களின் தொல்பொருளியல்
  • ஆஸ்திரேலியத் தொல்பொருளியல்
  • ஐரோப்பியத் தொல்பொருளியல்
  • தொழில்துறைத் தொல்பொருளியல் தொழிற் புரட்சியின் சின்னங்களான பொருட்களின் பேணுகையில் கவனம் செலுத்துவது.
  • நிலத்தோற்றத் தொல்பொருளியல் involves identifying and studying sites as components in a wider geographical area.
  • கடல்சார் தொல்பொருளியல் is the study of submerged archaeological sites, including shipwrecks as well as settlements that have been engulfed by bodies of water.
  • மத்திய கிழக்குத் தொல்பொருளியல்
  • மத்தியகாலத் தொல்பொருளியல் என்பது ரோமருக்குப் பிற்பட்ட, பதினாறாம் நூற்றாண்டு வரையான, ஐரோப்பியத் தொல்பொருளியல் பற்றிய படிப்பாகும்.
  • மத்திய காலத்துக்குப் பிற்பட்ட தொல்பொருளியல் is the study of material culture in Europe from the sixteenth century onwards.
  • நவீன தொல்பொருளியல் is the study of modern society using archaeological methods.

[தொகு] தொடர்பானவை

  • பிரபல தொல்பொருளியல் கண்டுபிடிப்புக்களின் பட்டியல்
  • பிரபல தொல்பொருளியல் களங்களின் பட்டியல்
  • தொல்பொருளியலாளர்களின் பட்டியல்
  • தொல்பொருளியலில் Systems theory


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத்தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -