Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நிலவியல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நிலவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது, புவியில், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது. மேலும், விலையுயர்ந்த இரத்தினக் கற்கள் மற்றும் கல்நார், மைக்கா, பொஸ்பேற்றுகள், களிமண், படிகக்கல், சிலிக்கா போன்ற கனிமப் பொருட்களைப் பூமியிலிருந்து பெற்றுப் பயனடைவதற்கும் நிலவியல் உதவுகின்றது.

நிலவியலின் கோட்பாடுகளை சூரியக் குடும்பத்திலுள்ள பிற கோள்கள் முதலியவற்றுக்கும் பயன்படுத்தி ஆய்வுசெய்வது, விண்நிலவியல் (Astrogeology) ஆகும்.

[தொகு] வரலாறு

சீனாவில் பல்துறை அறிஞராக விளங்கிய ஷென் குவா (1031 - 1095) என்பவர், நில உருவாக்கம் பற்றிய கருதுகோள் (hypothesis) ஒன்றை முன்வைத்தார். இக் கருதுகோள், கடலிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவிலிருந்த மலைப் பகுதியில், நிலவியற் படைகளில் காணப்பட்ட கடல்வாழ் உயிரின ஓடுகளின் படிவுகள் தொடர்பாக அவர் மேற்கொண்ட அவதானங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மலைகள் அரிப்புக்கு உள்ளாகி வண்டல் படிவுகள் ஏற்பட்டதன் மூலமே இவ்வாறான நிலப்பரப்புகள் உருவாகி இருக்கக்கூடும் என்று அவர் உய்த்துணர்ந்தார்.

அரிஸ்ட்டாட்டிலின் (Aristotle) மாணவரான தியோபிரேஸ்டஸ் (Theophrastus) என்பவர் எழுதிய பெரி லித்தோன் என்னும் பாறைகள் பற்றிய புத்தகமே ஆயிரம் ஆண்டுகளாக அதிகாரபூர்வமான நூலாக இருந்துவந்தது. இந் நூல், இலத்தீன், பிரெஞ்சு போன்ற பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1556 ல், ஜோர்க் போவர் (Georg Bauer) என்னும் மருத்துவர் சுரங்கவியல், உலோகவியல் தொடர்பாக அன்றிருந்த அறிவைத் தொகுத்து நூலொன்றை எழுதியுள்ளார். முதலாவது நவீன நிலவியலாளர் என்று கருதப்படுபவர் ஜேம்ஸ் ஹூட்டன் (James Hutton). 1788 ல், இவர் எழுதிய புவி பற்றிய கோட்பாடு என்னும் கட்டுரை எடின்பரோ அரச சங்கத்தின் (Royal Society of Edinburgh) வெளியீட்டில் இடம்பெற்றது. இக் கோட்பாட்டையே இன்று யுனிபோமிட்டேரியனிசம் (uniformitarianism) எனக் குறிப்பிடுகிறார்கள். மலைகள் அரிக்கப்பட்டு, கடலுக்கு அடியில் படிந்து பாறையாகி, அது மேலும் வளர்ந்து நிலப்பகுதி ஆவதற்கு மிக நீண்ட காலம் எடுத்திருக்கும் எனக் குறிப்பிட்ட சிமித், இக்கருத்தை அடிப்படையாக வைத்துப் பூமியின் வயது, அக்காலத்தில் பொதுவாகக் கருதப்பட்டு வந்ததைவிட மிக அதிகமாக இருக்கவேண்டுமென வாதிட்டார்.

வில்லியம் சிமித் (1769-1839) என்பார் முன்னோடியாகக் கருதத்தக்க நிலவியல் வரைபடங்கள் சிலவற்றை வரைந்துள்ளதுடன், பாறைப் படைகளில் காணப்பட்ட தொல்லுயிர்ப் படிவங்களை ஆராய்ந்து, அப்படைகளை ஒழுங்கு வரிசைப்படுத்தும் செயற்பாடுகளையும் தொடக்கிவைத்தார்.

ஜோர்ஜெஸ் குவியெர் (Georges Cuvier) என்பவர், பாரிஸில், பழங்கால யானையொன்றின் எலும்புப் படிவமொன்றைக் கண்டுபிடித்தார். இதனால் தூண்டப்பட்டு இவரும் அலெக்ஸாண்ட்ரே புரொங்னியார்ட் (Alexandre Brongniart) என்பவரும் சேர்ந்து, 1811 ல், புவியின் பழமை பற்றிய விளக்கமொன்றை எழுதி வெளியிட்டனர். இதை நிறுவுவதற்காக, பாறை அடுக்கியல் (stratigraphy) சார்ந்த, புவிப் படைகளின் வரன்முறை ஒழுங்கு பற்றிய கொள்கையொன்றையும் உருவாக்கினார்கள்.

சார்லஸ் லியெல் () என்பவர் ஹூட்டனின் யுனிபோமிட்டேரியனிசத்தை வலியுறுத்தி, புகழ்பெற்ற, நிலவியலின் கொள்கைகள் (Principles of Geology) என்னும் நூலை 1827ல் எழுதினார். இந்நூலே சார்ல்ஸ் டார்வின் அவர்களது புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டது.

தட்டுப்புவிப்பொறைக் கட்டமைப்பு - கடற்தரை விரிவாக்கம் மற்றும் கண்டப் பெயர்ச்சி என்பன புவிக்கோள மாதிரியொன்றில் காட்டப்பட்டுள்ளன.
தட்டுப்புவிப்பொறைக் கட்டமைப்பு - கடற்தரை விரிவாக்கம் மற்றும் கண்டப் பெயர்ச்சி என்பன புவிக்கோள மாதிரியொன்றில் காட்டப்பட்டுள்ளன.

19 ஆம்நூற்றாண்டின் நிலவியல், பெரும்பாலும், பூமியின் சரியான வயது பற்றிய பிரச்சினையைச் சுற்றியே அமைந்தது எனலாம். இவ் வயது பற்றிய கணிப்புகள் சில இலட்சங்கள் முதல் பல பில்லியன் ஆண்டுகள் வரை வேறுபாடாக அமைந்திருந்தன. நிலவியலில், 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக முக்கியமான நிகழ்வு, 1960 களில் நிகழ்ந்த தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (plate tectonics) கோட்பாட்டின் உருவாக்கமாகும். தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாடு இரண்டு வேறுவேறான நிலவியல் அவதானிப்புகளில் இருந்து உருவானது. ஒன்று கடற்தரை விரிவாக்கம் (seafloor spreading), மற்றது கண்டப் பெயர்ச்சி (continental drift). இக் கோட்பாடு புவி அறிவியல் துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திற்று.

கண்டப் பெயர்ச்சிக் கோட்பாடு 1912 ஆம் ஆண்டில் அல்பிரட் வெகெனர் (Alfred Wegener) மற்றும் ஆர்தர் ஹோம்ஸ் (Arthur Holmes) என்பவர்களால் முன்வைக்கப்பட்டது. எனினும் 1960 களில் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்படும்வரை இது பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.

[தொகு] முக்கியமான நிலவியற் கொள்கைகள்

நிலவியலில் பல முக்கியமான கொள்கைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை, பூயின் பல்வேறு படைகள் உருவான விதங்களை விளக்கவும், அப் படைகளின் ஒன்றுக்கொன்று சார்பான வயதுகளைக் கணிக்கவும் பயன்படுகின்றன.

ஊடுருவற் தொடர்புகள் கொள்கை (The Principle of Intrusive Relationships)

குறுக்கு வெட்டுத் தொடர்புகள் கொள்கை (The Principle of Cross-cutting Relationships)

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com