ஹைட்ரஜன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||
பொது | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
ஹைட்ரஜன், H, 1 | ||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை |
மாழையிலிகள் | ||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
1, 1, s | ||||||||||||||
தோற்றம் | நிறமற்றது![]() |
||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) |
1.00794(7) g/mol | ||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு |
1s1 | ||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
1 | ||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||
இயல் நிலை | வளிமம் | ||||||||||||||
அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 0.08988 g/L |
||||||||||||||
உருகு வெப்பநிலை |
14.01 K (-259.14 °C, -434.45 °F) |
||||||||||||||
கொதி நிலை | 20.28 K (-252.87 °C, -423.17 °F) |
||||||||||||||
Triple point | 13.8033 K, 7.042 kPa | ||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
(H2) 0.117 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
(H2) 0.904 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) (H2) 28.836 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||
|
|||||||||||||||
Critical temperature | 32.19 K | ||||||||||||||
Critical pressure | 1.315 MPa | ||||||||||||||
Critical density | 30.12 g/L | ||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||
படிக அமைப்பு | hexagonal | ||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் |
1, -1 (amphoteric oxide) |
||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 2.20 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||
Ionization energies | 1st: 1312.0 kJ/mol | ||||||||||||||
அணு ஆரம் | 25 pm | ||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) |
53 pm (போர் ஆரம்) | ||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 37 pm | ||||||||||||||
வான் டெர் வால் ஆரம் |
120 பி.மீ (pm) | ||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||
காந்த வகை | ??? | ||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) 180.5 m வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||
ஒலியின் விரைவு | (gas, 27 °C) 1310 மீ/நொ (m/s) | ||||||||||||||
CAS பதிவெண் | 1333-74-0 | ||||||||||||||
மேற்கோள்கள் |
ஹைட்ரஜன் (நீரகம்) (ஐதரசன்: இலங்கை வழக்கு, ஆங்கிலம்:Hydrogen, இலத்தீன்: hydrogenium, கிரேக்க மொழியில் இருந்து: hydro: நீர், genes: உருவாக்கும்), தனிம முறை அட்டவணையில் H என்ற சின்னமும் அணு எண் 1ம் உடைய ஒரு வேதித் தனிமம் ஆகும். இதனைத் தமிழில் நீரதை, நீரியம், நீரசம் ஆகிய தமிழ்ச் சொற்களாலும் குறிக்கப்பெறும். ஹைட்ரஜனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற மணமற்ற எளிதில் தீப்பிடக்கக்கூடிய வளிமம் (வாயு) ஆகும். இத் தனிமம் மாழையல்லா (உலோகமற்ற) வகையைச் சேர்ந்தது. இது ஒற்றை இயைனிய (univalent) பண்பும், இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து, ஈரணு (H2) வடிவு கொள்ளும் பண்பும் கொண்ட தனிமம் ஆகும்.
ஹைட்ரஜன், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றினும் எடை குறைவானதும், அதிகம் கிடைக்கக்கூடியதுமானதும் ஆகும். இது நீர், அனைத்து உயிரகச் (organic) சேர்மங்கள், (கூண்டு மூலக்கூறுகளாகிய பக்மினிசிட்டர் ஃவுல்லரீன் (buckminsterfullerene) போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து) மற்றும் அனைத்து உயிரினங்களிலும் இடம் பெற்றுள்ளது. இது வேதியியல் வினைவழி பெரும்பாலான பிறத்தனிமங்களுடன் வினையாற்றவல்லது. அண்டப் பெரு வெளியில் (பேரண்டத்தில்),நாள்மீன்கள் போன்ற யாவும் உள்ளடக்கிய பேரண்டத்தில் உள்ள பொருட்களில் 75% ஹைட்ரஜன் தான் இருப்பதாக கணித்துள்ளார்கள். ஹைட்ரஜன் அம்மோனியா உண்டாக்காகவும், எடைகுறைவானதால் மேலுந்தும் வளிமமாகவும், மாற்று எரிபொருளாகவும், எரிபொருள் கலன்களுக்கான வளிமமாகவும் பயன்படுகின்றது.
[தொகு] அருஞ்சொற் பொருள்
- ஈரணு - diatomic
- மேலுந்து வாயு - lifting gas
- எரிபொருள் கலன் - fuel cell
[தொகு] வெளி இணைப்புகள்