See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஹென்றி பெக்கெரல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஹென்றி பெக்கெரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆன்டுவான் ஹென்றி பெக்கெரல்
Antoine Henri Becquerel

ஆன்டுவான் பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர்
பிறப்பு டிசம்பர் 15 1852
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு ஆகஸ்ட் 25 1908 (அகவை 55)
பிரித்தானி, பிரான்ஸ்
வாழ்விடம் பிரான்ஸ்
நாட்டுரிமை பிரெஞ்சு
பெயர் ஈட்டியது
அறியப்படுவது

கதிரியக்கம்

ஆன்டுவான் ஹென்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel, டிசம்பர் 15, 1852 - ஆகஸ்ட் 25, 1908) ஒரு பிரெஞ்சு இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கு 1903 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

பெக்கெரல் பாரிஸ் நகரத்தில் பிறந்தவர். இவர் மற்றும் இவரது மகன் ஜீன் உட்பட நான்கு தலைமுறை அறிவியலாளர்களை இவரது குடும்பம் பெற்றுள்ளது.

1892 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் இயற்பியல் பிரிவின் தலைவராகவும் பின்னர் 1894இல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் ஆனார்.

[தொகு] கதிரியக்கம்

முதன்மைக் கட்டுரை: கதிரியக்கம்

பெக்கெரல் 1896 இல் யுரேனியம் உப்புக்களில் phosphorescence ஐ ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்ஹெம் ரொண்ட்ஜெனின் கண்டுபிடிப்புகளை ஆராயும் ஒரு சோதனையில், பெக்கெரல் ஒளிப்பாயப் பொருளான பொட்டாசியம் யூரனைல் சல்பேற்றை ஒளிப்படத் தட்டுக்களில் (photographic plates) வைத்து, தட்டுகளை கருப்புக் காகிதத்தினால் சுற்றி வைத்து சூரிய ஒளியை செலுத்தினார். ஆனாலும் பரிசோதனை தொடங்க முன்னரே புகைப்படத் தட்டுக்கள் முழுமையாகப் பாதிப்படைந்ததை (exposed) அவதானித்தார். யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்.

1903, மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

[தொகு] மறைவு

1908 இல் பெக்கெரல் அறிவியல் கழகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அதே ஆண்டில் தனது 55வது அகவையில் காலமானார்.

[தொகு] பெற்ற விருதுகள்

  • ரம்ஃபோர்ட் விருது (1900)
  • ஹெல்ம்ஹோல்ட்ஸ் விருது (1901)
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903)
  • பார்னார்ட் விருது (1905)

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -