See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பொறியியல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொறியியல்
பொறியியல்
பொறியியல்
பொறியியல்

பொறியியல் என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். .

பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுப்பிளவு போன்றவை.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

பொறியியல் துறையின் அடிப்படைக்கூறுகள் பல்வேறு நாகரிகங்களில் தொன்று தொட்டு காணப்படுகிறது. சக்கரம் (ஆழி), நெம்புகோல், புல்லி (pulley, கப்பி), போன்ற கருவிகளை அக்காலத்தய மக்கள் உருவாக்கியதிலிருந்தும், பயன்படுத்தியதிலிருந்தும் இதை அறியலாம். போர்க்கருவிகளை உருவாக்குவதிலும், கட்டிடக் கலைத்துறையிலும் பொறியியல் கூறுகள் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. தற்கால பொறியில்துறை ஐரோப்பாவில் இயந்திரமயமாக்கல் தொடங்கிய காலத்திலிருந்து (18-19 ஆவது நூற்றாண்டுகளில்) முக்கியத்துவம் அடைந்தது.

[தொகு] பெயர்க்காரணம்

பொறியியல் என்ற தமிழ்ச்சொல், "Engineering" என்பதற்கு இணையாக பயன்படுத்தும் ஒன்றாகும். பொறி (கருவிகள் ஆக்குவது, இயங்குவது பற்றியது)+அறிவியல் = பொறியியல். "Engineering" என்ற சொல் "Ingeniosus" என்ற சொல்லிலிருந்து உருவானது ஒன்று. இந்த ஆங்கிலச் சொல் 14 ஆவது நூற்றாண்டில் இருந்து ஆங்கில-பிரெஞ்ச் மொழிகளில் பயின்று வந்துள்ளது[1]

[தொகு] முக்கிய கிளைத்துறைகள்

* வேளாண்மைப் பொறியியல்

[தொகு] பொறியியல் வழிமுறை

பொறியியல் வழிமுறை
பொறியியல் வழிமுறை
  • பிரச்சினை/தேவை மதிப்பீடு - Assessment
  • தேவைகளை அறிதல் - Requirments Collection and Analysis
  • மேல்நிலை வடிவமைப்பு - Conceptual or High Level Design
  • (திட்ட மேலாண்மை - பயன்-உழைப்பு பகுத்தறிதல் (Cost Benefit Analysis), பணி - காலதேவை அட்டவணை (WBS - Work Breakdown Schedule), பொறியிலாளர் மதிப்பீடு)
  • துல்லிய வடிவமைப்பு - Detail Design
  • நிறைவேற்றல் - Implementation
  • தன்னிலை பரிசோதனை - Testing - white box
  • பயனர் பரிசோதனை - Testing - user
  • செயற்படுகள பரிசோதனை - Testing - operational readiness
  • செயற்படுத்தல் - Deployment
  • பராமரிப்பு - Maintenance
  • ஆவணப்படுத்தல் - Documentation

[தொகு] பொறியியலாளரின் வேலை

ஒரு பொறியாளர் எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பிலான வரையறைகளை அடையாளங்கண்டு அவற்றைப் புரிந்து கொண்டு வடிவமைப்புச் செய்யவேண்டும். இங்கே வரையறைகள் என்பது, கிடைக்கக்கூடிய வளங்கள்; பௌதீக அல்லது தொழில்நுட்பம்சார் வரையறைகள்; எதிர்கால மாற்றங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் ஏற்றதாயிருத்தல்; செலவு; உற்பத்தி செய்யக்கூடிய தன்மை; பேணக்கூடிய தன்மை; சந்தைப்படுத்தல்; அழகியல், சமூகம் மற்றும் நெறிமுறைகள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியது. Engineering is therefore a contingent enterprise influenced by many considerations.

[தொகு] முக்கிய பொறியியல் படைப்புகள்

அமெரிக்க National Academy of Engineering படி பின்வருவம் இருபது 20 நூற்றாண்டின் முக்கிய பொறியியல் படைப்புகள் ஆகும். [1] அனேகமானவையை கண்டுபிடிக்க அமெரிக்காவே முக்கிய பங்காற்றியுள்ளது.

  • மின்சக்தி வழங்கல் - Electrification
  • தானுந்து - Automobile
  • விமானம் - Airplane
  • நீர் விநியோகம் - Water Supply and Distribution
  • இலத்திரனியல் - Electronics
  • வானொலி, தொலைக்காட்சி - Radio and Television
  • வேளாண்மை இயந்திரமயமாக்கம் - Agricultural Mechanization
  • கணினி - Computers
  • தொலைபேசி - Telephone
  • Air Conditioning and Refrigeration
  • பெருஞ்சாலைகள் - Highways
  • விண்வெளிக் கலம் - Spacecraft
  • இணையம் - Internet
  • Imaging
  • வீட்டு தளபாடங்கள் - Household Appliances
  • மருத்துவ தொழில்நுட்பம் - Health Technologies
  • Pertroleum and Petrochemical Technologies
  • Laser and Fiber Optics
  • அணுத் தொழில்நுட்பம் - Nuclear Technologies
  • அதி திறன் பொருட்கள் - High Performance Materials

மேலே குறிப்பிடவற்றுள் கட்டிட தொழில்நுட்பம், Sanitation System, இராணுவ தொழில்நுட்பங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] பொறியியலும் சமூகமும்

Engineering responds to impulses that go beyond mere survival: a craving for variety and new possibilities, a feeling for proportion - for beauty - that we share with the artist. As engineers, we feel an urge to challenge nature - fighting storm, floods, earthquakes, and other life-threatening forces - yet also to work in harmony with the nature, seeking understanding of soils, metals, and other basic materials of earth. We partake of the wonders of the natural sciences and enter the pristine realm of mathematics. Our work contributes to the well-being of our fellow humans.

'பொறியியல் வாழ்க்கையில் தப்பிபிழைத்து வாழுவதற்கான உந்தலை மீறியது. புதிய சாத்தியக்கூறுகளை அது சிந்திக்கிறது. கலைகளைப் போல பொறியியலில் அழகு உண்டு, அளவுகளின் மதிப்பீடு உண்டு. பொறியிலாளர் இயற்கையைப் போட்டிக்கு அழைக்கின்றார்கள். சூறாவளியை எதிர்க்கின்றனர், நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு என இயற்கையின் மூர்க்கமான ஆற்றல்களோடு பொறியலாளர் போட்டிபோடுகின்றார்கள். அதேவேளை, இயற்கையுடன் இயைந்து செயற்படுகிறார்கள். மண்ணை, கனிமத்தை, வெவேறு தனிமங்களை அவர்கள் விளங்கிகொள்கிறார்கள். அறிவியலையும் கணிதத்தையும் அறிந்து பயன்படுத்திக்கொள்கிறார்கள். மனித நல்வாழ்க்கைக்கு பொறியிலாளரின் பங்களிப்பு அளப்பரியது.'

Samuel C. Florman. (1987). The Civilized Engineer. New York: St. Martin's Press.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] உசாத்துணைகள்

  • Nigel Cross. Engineering Design Methods: Strategies for Product Design. 2nd ed. Toronto: John Wiley & Sons, 1994.
  • Martyn S. Ray. Elements of Engineering Design. Toronto: Prentice Hall, 1985.
  • John W. Priest. Engineering Design for Producibility and Reliability. New York: Marcel Dekker, 1988.

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -