See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ரோசா லக்சம்பேர்க் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ரோசா லக்சம்பேர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ரோசா லக்சம்பேர்க்
ரோசா லக்சம்பேர்க்
பெர்லினில் ரோசா லக்சம்பேர்கின் சிலை
பெர்லினில் ரோசா லக்சம்பேர்கின் சிலை

ரோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg) (மார்ச் 5, 1870/71ஜனவரி 15, 1919), போலந்தில் பிறந்த ஒரு ஜெர்மனிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும் ஒரு புரட்சியாளரும் ஆவார். Social Democratic Party of Germany செங்கொடி (Die Rote Fahne) என்ற இதழை ஆரம்பித்தவர் இவரே. முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பங்குபற்றியதை ஜேர்மனி சமூக-மக்களாட்சிக் கட்சி (ஜேர்மன் சோசியல்-டெமோகிரட்டிக் கட்சி) ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து "புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் லீக்" (Spartacist League) என்ற அமைப்பை உருவாக்கினார். இதுவே பின்னர் ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் ஜனவரி 1919 இல் நடத்தப்பட்ட பேர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி (right-wing) துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் (left-wing) கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீனெக்ட் இருவரும் ஜனநாயக சோசலிஸ்டுகளாலூம் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு] போலந்து

ரொசாலியா லக்சம்பேர்க் மார்ச் 5, 1870 அல்லது 1871 இல் யூத இன மத்தியதரக் குடும்பத்தில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நகரான சாமொஸ்க்கில் பிறந்தார். ஐந்து வயதிலேயே இவரைப் பாதித்திருந்த இடுப்பு வலி நிரந்தர ஊனமுடையவரானார். [1]

1873 இல் குடும்பத்துடன் வார்சாவுக்கு குடிபெயர்ந்த ரோசா 1886 இல் இருந்து போலந்தின் இடதுசாரி பாட்டாளிக் கட்சியில் (Proletariat party) சேர்ந்தார். பொது வேலைநிறுத்தமொன்றை முன்னின்று நடத்தினார். இதனை அடுத்து இவரது கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதில் கட்சி காலைக்கப்பட்டது. ஆனாலும் ரோசா தனது சகாக்களை இரகசியமாகச் சந்தித்து வந்தார்.

1889 இல் இவர் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். அங்கு சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய துறைகளில் உயர் கல்வியைப் பெற்றார்.

1893 இல் இவர் வேறு சிலருடன் இணைந்து Sprawa Robotnicza (The Workers' Cause) என்ன பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். போலந்து சோசலிசக் கட்சியினரின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்டு தமது பத்திரிகையில் எழுதினார். புரட்சியின் மூலமே போலந்தை விடுவிக்கமுடியும் என்று நம்பினார். குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, மற்றும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலாளித்துவத்துக்கு எதிராக அணிதிரளவேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இருந்தது.

[தொகு] ஜெர்மனி

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -