பொதுவுடமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொதுவுடமை
பொதுக் கொள்கைகள்
தத்துவங்கள்
பொதுவுடமைவாதிகள்
|
பொதுவுடமை அல்லது கம்யூனிசம் (Communism) வர்க்கமற்ற (”classless”, பாகுபாடற்ற) சமுதாயம் அமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் கொண்ட தத்துவம் ஆகும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ் தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாகும்.. பொதுவுடமை சமூகத்தில்,
1. உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.
2. எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.
3. மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர்.
பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது அறவே தவிர்க்கப்படுகிறது. இந்த வளங்களை கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய் வர்க்க மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்தப்படுகிறது.