கரும்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கரும்பு | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வெட்டப்பட்ட கரும்பு
|
||||||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
Species | ||||||||||||
Saccharum arundinaceum |
கரும்பு சர்க்கரை உற்பத்திக்கு முக்கியமாகப் பயன்படும், உண்பதற்கு இனிக்கும் ஒரு இடை தட்ப வெட்ப நிலைத் தாவரம் ஆகும். நீண்ட தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாகவும் கரும்பு வளரும். பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.
[தொகு] தமிழர் பண்பாட்டில் கரும்பு
கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று தமிழர் கருதுவர். ஆகையால், தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழமை.
கரும்பு என ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள்:
கரும்பு, கரும்பமுதம், கரும்பமுது, கரும்பரசி, கரும்பழகி, கரும்பிசை, கரும்பூராள், கரும்பெழிலி, கரும்பு, கரும்புநகை, கரும்புமொழி, கரும்புவில், கரும்புவிழி.
கரும்புடன் தொடர்புடைய பழமொழிகள்:
- கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
- கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
- கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
- கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
[தொகு] வெளி இணைப்புகள்
- கரும்பு ஆராய்ச்சி மையம், கோவை - இந்திய தலைமை கரும்பு ஆராய்ச்சி மையம்