வைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்கஹால் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே முழுதும் புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]
வைன் என்ற பெயர் திராட்சை என்ற பொருள் தரும் லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.